ஐரோப்பா செய்தி

மாநாட்டில் பிரதமரின் தாக்கு பேச்சு சரியா – வெளியுறவுச் செயலாளர் கூறுவது என்ன?

  • February 15, 2026
  • 0 Comments

வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அரசியல் ஒன்றோடொன்று தொடர்புடையவை என வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் இடம்பெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் பசுமைக் கட்சி மற்றும் சீர்திருத்த UK கட்சியை விமர்சித்திருந்த நிலையில் ஸ்கை நியூஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேட்டோ கூட்டணிக்கான உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது என்றும், சில கட்சிகள் ரஷ்யாவின் அச்சுறுத்தலை போதுமான தீவிரத்துடன் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். […]

உலகம்

நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் அட்டகாசம் : 48 பேர் உயிரிழப்பு!

  • February 15, 2026
  • 0 Comments

வடக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களில் துப்பாக்கிதாரிகள் நேற்று முன்னெடுத்த திடீர் தாக்குதலில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நைஜர் மாநிலத்தில் உள்ள குவாரா (Kwara) மற்றும் கட்சினா (Katsina) மாநிலங்களின் எல்லையில் உள்ள கிராமங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நைஜர் மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன் (Wasiu Abiodun), மேற்படி கிராமத்தில் நடந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார். “துங்கா-மகேரி கிராமத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரிகள் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் பேராபத்தாக மாறிய தட்டம்மை பரவல் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • February 15, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனின் என்ஃபீல்ட் (Enfield) பகுதியில் தட்டம்மை (Measles) வேகமாகப் பரவி வருவதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் என்ஃபீல்டில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 34 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டு இங்கிலாந்து (England) முழுவதும் உறுதி செய்யப்பட்ட 96 வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு என்ஃபீல்டைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஃபீல்ட் (Enfield) மற்றும் அண்டை ஹாரிங்கி (Haringey) பகுதிகளில் சுமார் ஏழு பாடசாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

இலங்கை

வவுனியாவில் 8000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அடையாளம்!

  • February 15, 2026
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் சுமார் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்தக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட முன்முயற்சிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களை ஆதரிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதன்படி 2026 வரவு செலவுத் […]

ஐரோப்பா செய்தி

கிரேட்டர் மான்செஸ்டரில் மாத இறுதியில் இடைத்தேர்தல்

  • February 15, 2026
  • 0 Comments

கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள கோர்டன் மற்றும் டென்டன் (Greater Manchester – the Gorton and Denton) தொகுதியில் இந்த மாத இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது பிரதமருக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் 18 மாதங்களுக்கு முன்பு தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அங்கு பதவி வகித்த எம்.பி. Andrew Gwynne அனுப்பிய அவமதிப்பான குறுஞ்செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியிலிருந்து […]

ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்து, வேல்ஸ் தேர்தல்கள்- பெரும் சவாலுக்கு முகங்கொடுத்து வரும் பிரதமர்

  • February 15, 2026
  • 0 Comments

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமைக்கும் தொடர்ந்தும் அழுத்து அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவி விலக வேண்டும் என ஸ்காட்லாந்து தொழிற்கட்சித் தலைவர், கூறியதைத் தொடர்ந்து, அவரது தலைமையைப் பற்றி கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மே மாதத்தில் நடைபெற உள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் உள்ளூர் தேர்தல்கள் தொழிற்கட்சிக்கு முக்கியமான சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல்களில் கட்சி மோசமான முடிவுகளை சந்தித்தால், ஸ்டார்மரின் தலைமைக்கு சவால் […]

உலகம்

காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் – 09 பேர் பலி!

  • February 15, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறி செயற்பட்டமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசித்து வந்த கூடாரத்தை நோக்கி இந்த வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் தெற்கில் உள்ள கான் யூனிஸில் மற்றொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 05 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத போர்நிறுத்தத்தில் இருந்து […]

உலகம்

ஜெனீவாவில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை – முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா, ஈரான்!

  • February 15, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் வரும் வாரம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் முரண்பட்ட கொள்கைகளால் பிளவுப்பட்டு நிற்கின்றன. வொஷிங்டன் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை மட்டுப்படுத்தவும், அதன் அனைத்து அணுசக்தி செறிவூட்டலையும் முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறது. ஆனால் ஈரான் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. அத்துடன் ட்ரம்ப் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலை  மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாகக் கூறியுள்ளதுடன், ஆட்சி மாற்றம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கிடையே ஈரான் ஜனாதிபதி […]

உலகம்

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்ட ISIS போராளிகள்!

  • February 15, 2026
  • 0 Comments

சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு 5,700 க்கும் மேற்பட்ட ISIS போராளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகிய மேற்படி பணிமாற்ற நடவடிக்கை கடந்த 23 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்கப் படைகள் 5,700 க்கும் மேற்பட்ட வயது வந்த ஆண் ISIS போராளிகளை சிரியாவில் உள்ள தடுப்பு மையங்களிலிருந்து ஈராக்கிய காவல் நிலையத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள அறிக்கையில், […]

உலகம்

பாலஸ்தீனத்திற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக அழைப்பு – பலர் ஆதரவு!

  • February 15, 2026
  • 0 Comments

பாலஸ்தீனத்திற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக  100க்கும் மேற்பட்ட முக்கிய இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள், பாலஸ்தீன மக்களின் இருப்பு உரிமையைப் பாதுகாப்பவரான பிரான்செஸ்கா அல்பானீஸுக்கு ( Francesca Albanese) முழு ஆதரவையும்” வழங்கினர். காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை வெளிப்படையாக விமர்சித்த அல்பானீஸ், “மனிதகுலமாக நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறார்” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார். […]

error: Content is protected !!