இலங்கை செய்தி

பிரதமருடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை Harini Amarasooriya சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் Temple Trees நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைகள் தொடர்பிலான வாய்ப்புகள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  

உலகம்

டியாகோ கார்சியா தீவை குத்தகைக்கு எடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு!

  • February 18, 2026
  • 0 Comments

சாகோஸ் (Chagos) தீவுகளை மொரீஷியஸிடம் (Mauritius) ஒப்படைத்து, ஒரு முக்கியமான இராணுவ தளத்தை மீண்டும் குத்தகைக்கு எடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தை  “தொடர்ந்து பயன்படுத்த அமெரிக்கா தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இராணுவத் தளத்தில் தொடர்வது “அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும்” மற்றும் “இந்தியப் பெருங்கடல் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை” உறுதி செய்யும் என்றும் […]

பொழுதுபோக்கு

அனிருத்தின் புது வழிப்பயணம்……!

  • February 18, 2026
  • 0 Comments

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ‘Albuquerque Records’ என்ற புதிய இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தமிழில் தற்போது ஜெயிலர் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தனது இசைப் பயணத்தில் புதிய கட்டத்தை இந்த நிறுவனத்தின் மூலம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படைப்பாற்றல், உரிமை மற்றும் கலாச்சார தாக்கத்தை மையமாகக் கொண்டு இசை வணிகத்தை உருவாக்கும் எனது பயணத்தின் […]

Home Affairs Minister Tony Burke ஆஸ்திரேலியா

IS அமைப்புடன் தொடர்புடையவர் ஆஸ்திரேலியா வர தடை விதிப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபரை நாடு திரும்புவதற்கு ஆஸ்திரேலியா Australia தற்காலிக தடை விதித்துள்ளது. அந்நாட்டு உள்துறை அமைச்சர் Home Affairs Minister Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். வடகிழக்குசிரியாவில் உள்ள அல்-ரோஜ் முகாமிலிருந்து 11 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் Damascus வழியாக ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலேயே குறித்த நபருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக காலணி!

  • February 18, 2026
  • 0 Comments

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரான டாக்டர் ஜியாங் லி (Jiayang Li), வயதானவர்கள் தங்கள் சமநிலையைப் பராமரிக்கவும், விழுவதைத் தடுக்கவும் உதவும் வகையில் புதிய காலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது 89 வயதான வழிகாட்டியான பீட்டர் லாங்லோயிஸ் (Peter Langlois) சரியாக நிற்கமுடியாமல் சிரமப்படுவதை அவதானித்ததன் மூலம் இதனை கண்டுப்பிடித்ததாக கூறுகிறார். இது வீழ்ச்சி அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவுவதாகவும், 253 சிறிய சென்சார்கள் மற்றும் மேம்பட்ட மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஒரு இன்சோல் (insole) உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் […]

இலங்கை கல்வி

பங்களாதேஷ் பிரதமருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை Tariq Rahman., இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான தாரிக் ரஹ்மானை சந்தித்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் […]

உலகம்

பனியில் புதைந்த 10 பேர் : மீட்பு பணிகளில் சிக்கல்!

  • February 18, 2026
  • 0 Comments

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நெவாடா கவுண்டி ஷெரிப் ( Nevada County Sheriff’) அலுவலகத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாயமானவர்களை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில், சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் வீசுவதாகவும், இடியுடன் கூடிய மழை மீட்பு நடவடிக்கைகளை தொய்வடைய செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியல்வாதிகளால் இனவாத ஆயுதம் கையிலெடுப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை […]

இலங்கை

கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

  • February 18, 2026
  • 0 Comments

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் இன்று (18) திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதேநேரம், பத்தரமுல்லையில் வசிக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று […]

உலகம்

ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர வத்திக்கான் மறுப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் “அமைதி வாரியம்” என்ற முன்முயற்சியில் வத்திக்கான் பங்கேற்காது என்று வத்திக்கானின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரி கார்டினல் பியட்ரோ பரோலின் ( Pietro Parolin) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நெருக்கடி சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைதி வாரியத்தில் சேர போப் லியோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஒரு வெளிநாட்டு பிரதேசத்தின் […]

error: Content is protected !!