உலகம்

சீனாவை கலக்கும் தற்காப்புக் கலையை வெளிப்படுத்தும் ரோபோக்கள் – வியந்து பார்க்கும் உலகம்!

  • February 18, 2026
  • 0 Comments

சீனா தனது சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நன்சக் (nunchuck) வகை ரோபோக்களை வெளியிட்டுள்ளது. குறித்த ரோபோக்கள் வருடாந்திர வசந்த விழாவின் போது தங்களின் தற்காப்புக் கலைத் திறன்களை வெளிப்படுத்தியுள்ளன. தடைகளைத் தாண்டி குதிப்பது மற்றும் வாள்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. முந்தைய ஆண்டின் குறைவான ஆற்றல்மிக்க ரோபோ காட்சியுடன் ஒப்பிடும்போது இந்த செயல்திறன் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் சீன மனித ரோபோக்களின் விரைவான பரிணாமத்தை […]

செய்தி

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

  • February 18, 2026
  • 0 Comments

பெரும் வெற்றியுடன் பாகிஸ்தான் Pakistan அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. T -20 உலகக்கிண்ண தொடரில் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா Namibia அணிகள் இன்று (18) மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பர்ஹான் சதம் (100) அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியாவை தாக்கும் புயல்!

  • February 18, 2026
  • 0 Comments

Pedro எனப் பெயரிடப்பட்ட புயல் இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த வாரத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வடக்கு அயர்லாந்தில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி புயலானது பிரான்ஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

ஐரோப்பா

திடீரென நிறைவடைந்த உக்ரைன் – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை!! ஜெலென்ஸ்கி அதிருப்தி!

  • February 18, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திடீரென நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரம் மட்டுமே இடம்பெற்ற இன்றைய விவாதத்தின்போது போர்க் கைதிகளின் பரிமாற்றம் மற்றும் பொதுமக்களின் விடுதலை உள்ளிட்ட மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelensky) சமீபத்திய விவாதங்களை “கடினமானது” என்று விவரித்துள்ளார். ஆனால் எதிர்கால பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய அவர், கியேவ் மற்றும் மொஸ்கோ இடையே வேறுபட்ட […]

ஐரோப்பா

பிரித்தானியர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் நோய் தொற்று – நால்வர் மரணம்!

  • February 18, 2026
  • 0 Comments

கேப் வெர்டே தீவுகளில் இருந்து நாடு திரும்பிய பிரித்தானிய சுற்றுலா பயணிகளிடையே ஷிகெல்லா (Shigella) தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தீவுக்கு பயணம் செய்த நான்கு பிரித்தானியர்கள் இரைப்பை நோயால் உயிரிழந்ததை தொடர்ந்து ஷிகெல்லா (Shigella) தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2025 முதல் 109 தொற்றுக்கள் பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது கேப் வெர்டே (Cape Verde) தீவுகளுக்கு […]

உலகம்

ட்ரம்ப் ஆட்சியில் பெரும்பாலான அமெரிக்கர்கள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் – வான்ஸ் கருத்து!

  • February 18, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சியமைத்ததில் இருந்து  பெரும்பாலான அமெரிக்கர்கள் பணக்காரர்களாக மாறியுள்ளதாக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்களுக்கு நிர்வாகத்தின் முயற்சிகள் காரணம் என்று கூறிய அவர் முன்னாள் ஜனாதிபதியான பைடனின் நிர்வாகத்தை விமர்சித்துள்ளார். 2026 இடைக்காலத் தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ட்ரம்ப் பொருளாதாரம் ஒரு கலவையான பையாக உள்ளது. குறைந்த பணவீக்கம் மற்றும் வலுவான […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா அணி வெற்றிநடை!

  • February 18, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா South Africa அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T20 உலக்கிண்ண தொடரின் 34-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் டெல்லியில் இன்று (18) மோதின. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் […]

உலகம் செய்தி

அமெரிக்க கப்பல்களை மூழ்கடிப்போம் – ஈரான் சபதம்!

  • February 18, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, மத்திய கிழக்கில் உள்ள எந்தவொரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களையும் மூழ்கடிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையானது, ஜெனீவாவில் நடந்து வரும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது பதட்டங்களை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போர் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியை மூடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ட்ரம்பின் முக்கிய கோரிக்கையான, செறிவூட்டப்பட்ட யுரேனியம் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்  என்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud […]

இந்தியா

கூகுள் CEO சுந்தர் பிச்சை – பிரதமர் மோடி சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை Google CEO Sundar Pichai, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக Artificial Intelligence Impact Summit சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார். இந்நிலையிலேயே கூகுள் நிறுவனத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் சகிதம் அவர், பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார். ஏ.ஐயில் இந்தியா செய்து வரும் பணிகள் மற்றும் இந்தத் துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் […]

ஐரோப்பா

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நம்பிக்கையில் பிரித்தானிய வங்கி!

  • February 18, 2026
  • 0 Comments

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தரவுகளின்படி, பிரித்தானியாவில்  பணவீக்கம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 3.4 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, ஜனவரியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்கான 02 சதவீதத்திற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க வீழ்ச்சியானது, அடுத்த மாதம் இங்கிலாந்து தேசிய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கையைத் தூண்டியுள்ளது. இதேவேளை வாழ்க்கைச் செலவைக் குறைப்பது […]

error: Content is protected !!