இலங்கை செய்தி

நீதித்துறையின் மீதான தலையீட்டை சகித்துக்கொள்ள முடியாது – கௌசல்ய நவரட்ண!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் சுயாதீனமாக செயற்படும் என அதன் புதிய தலைவர் கௌசல்ய நவரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் சுயாதீனமாக செயற்படும் அரசமைப்பை மதிக்கும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் மீதான எந்த தலையீட்டையும் சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமான அம்சம் என குறிப்பிட்டுள்ள அவர் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள படி இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் மனித உரிமைகளை பாதுகாக்கும் […]

இலங்கை செய்தி

புத்தாண்டை முன்னிட்டு இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அனுமதி!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எந்தவொரு பகுதியிலும் வீதியின் இருமருங்கில் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம்

  • April 11, 2023
  • 0 Comments

நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார் ஆயிரம் பேரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கடன் நிவாரண சபை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டளவில் ஐம்பத்தைந்து வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வந்ததாக இலங்கை மத்திய […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாத காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோருக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.slbfe.lk எனும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் Online Self Registration எனும் பகுதிக்குள் பிரவேசித்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய தரவுகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர்  பிரசாத் குலதுங்க  தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் வாகன இறக்குமதி குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கவில்லை  என அவர் மேலும் குறிப்பிட்டார். வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமனம்

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இந்தநிலையில், ஊடகக் கற்கைகள் துறையின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மனித பாவைனைக்கு உதவாத சாக்லேட்டுகள் மீட்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மனித பாவனைக்கு தகுதியற்ற சாக்லேட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹலவத்த  நகரில் உள்ள 3 கடைகளில் மனிதர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற சாக்லேட் கையிருப்பு இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், ஹலவத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகள், காலாவதி, உற்பத்தி தேதி போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடாமல் நாடளாவிய ரீதியில் […]

இலங்கை செய்தி

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்க போகும் சம்பளம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

சிறுவர்களின் போஷாக்கின்மை நிலைமை தொடர்பில் கண்டறிய விசேட குழு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்த விவகாரம் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் என்பதுடன். அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்யவுள்ளது. இக்குழு பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!