கடற்றொழிலாளர் பிரச்சினைகள் நியாயமாக தீர்த்து வைக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
புத்தளம் – கற்பிட்டி, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன் நியாயமான தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுயளித்தார். கற்பிட்டி, கந்தக்குளி சென். அந்தனி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதே கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். தொடர்ந்து, நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருக்கின்ற கற்பிட்டி, கந்தக்குளி முகத்துவார பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும் முகத்துவாரப் பகுதியை தூர்வாருவதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை […]












