மின் கம்பியில் உரசி தீ பிடித்த லாரி
கோவை கோவில்பாளையத்தில் இருந்து கவுண்ட்ம்பாளையத்திற்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியில் வரும்போது எதிரே வந்த பேருந்துக்கு வழி விடுவதற்காக லாரியை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரம் இருந்த தனியார் கம்பெனியின் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பியில் அட்டைப் பெட்டிகள் உரசியுள்ளது. அப்போது டிரான்ஸ்பார்மரில் பயங்கர சத்தம் ஏற்பட்டு அட்டைப் பெட்டிகள் தீ பிடித்து […]













