ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்!
ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை உக்ரைன் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதத்தில் உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களின் காரணமாக ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஏற்றுமதிகள் ஆரம்பித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ ரஷ்யா எங்கள் எரிசக்தி அமைப்பை அழிப்பதில் வெற்றிப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஏற்றுமதிகள் தொடங்கினாலும், உள்நாட்டு மக்களுக்கு மின்சாரம் வழங்குவது நாட்டின் முன்னுரிமையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். […]












