அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க   விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் […]

இலங்கை செய்தி

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

  • December 22, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8 % வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 2025 நவம்பர் […]

உலகம் செய்தி

அதிகரிக்கும் மோதல் – சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க தயாராகும் ஜப்பான்!

  • December 22, 2025
  • 0 Comments

ஜப்பானில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் நகரம் (ski resort town) இடையூறு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க தயாராகி வருகிறது. வடமேற்கு நாகானோ (Nagano) மாகாணத்தில் உள்ள ஹகுபா கிராமம் (Hakuba) மேற்படி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை வரும் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளுர் மக்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்ற […]

இலங்கை செய்தி

தரமற்ற பொருட்கள் மற்றும் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; யாழ். அரசாங்க அதிபர் எச்சரிக்கை

  • December 22, 2025
  • 0 Comments

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை, பொதிகளில் உள்ள சுட்டுத் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு – ஜெனரல் ஒருவர் பலி!

  • December 22, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) இன்று கார் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) ரஷ்ய ஆயுதப்படைகளின் பயிற்சி இயக்குநரகத்தின் தலைவராக  பணியாற்றி வந்தவராவார். இந்த சம்பவம் இன்று காலை 07.00 மணியளவில் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. உக்ரைனிய உளவுத்துறைகள் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  ரஷ்ய புலனாய்வாளர்கள் இது  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

இலங்கை செய்தி விளையாட்டு

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது: ஜனாதிபதிக்கு WNPS அவசர கடிதம்

  • December 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம் சட்டவிரோதமானது என இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (WNPS) எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அச்சங்கம் அனுப்பியுள்ள விசேட கடிதத்தில், குறித்த திட்டம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள் மற்றும் உப்பளங்கள் போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறையான அனுமதிகளைப் பெறாமல், தவறான தகவல்களை வழங்கி […]

ஐரோப்பா செய்தி

UKவில் கேள்விக்குறியாகும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை முறை!

  • December 22, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  சிறுபான்மை இனக் குடிமக்களின் வாழ்க்கை கடினமாகி வருவதாக புதிய சமத்துவ கண்காணிப்புக் குழுவின் தலைவரான டாக்டர் மேரி-ஆன் ஸ்டீபன்சன் (Dr Mary-Ann Stephenso)  தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் சமீபகாலமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டிலிருந்து (ECHR) இங்கிலாந்து வெளியேறுவது தவறான கொள்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மனித உரிமைகள் வழக்குகள் குறித்த தவறான ஊடக செய்திகளையும் அவர் விமர்சித்துள்ளார். நாடுகடத்தலை […]

உலகம் செய்தி

மேற்கத்தேய நாடுகளில் உள்ள யூத மக்களுக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல்!

  • December 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள யூத சமூகங்களை இஸ்ரேலுக்கு குடிப்பெயருமாறு  இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் (Gideon Saar) அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். யூதர்கள் “உலகம் முழுவதும் வேட்டையாடப்படுகிறார்கள்” என்றும், குடும்பங்கள் ஏன் இதுபோன்ற சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யூத எதிர்ப்பு தாக்குதல்களின் அதிகரிப்பை காசாவில் உள்ள […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம் : நாய் வளர்ப்பு மற்றும் வேட்டைக்குத் தடை

  • December 22, 2025
  • 0 Comments

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும் ‘பப்பி பார்மிங்’ (Puppy Farming) முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதுடன், நாய்களுக்கான மின்சார அதிர்வு கழுத்துப்பட்டை (Electric Shock Collars) பயன்பாட்டைத் தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மேலும், நரி வேட்டைக்கான போர்வையாகப் பயன்படுத்தப்படும் ‘டிரெயில் ஹண்டிங்’ (Trail Hunting) முறைக்கும், வனவிலங்குகளைக் காயப்படுத்தும் பொறி நுட்பங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது. விவசாயத் […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

error: Content is protected !!