உலகம்

புத்தாண்டு கொண்டாட்டம் – தனது பாரம்பரியத்தை மாற்றிய ஹொங்கொங்!

  • December 31, 2025
  • 0 Comments

ஹொங்காங் (Hong Kong) தனது பாரம்பரிய புத்தாண்டு தின வாணவேடிக்கை நிகழ்ச்சியை விக்டோரியா துறைமுகத்தில் இம்முறை இரத்து செய்துள்ளது. நவம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தில் 161 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாணவேடிக்கைகளுக்குப் பதிலாக, நகரத்தின் மத்தியில்  ஒரு இசை நிகழ்ச்சியையும் எட்டு முக்கிய அடையாளங்களில் மூன்று நிமிட ஒளி நிகழ்ச்சியையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாவுக்கான செயலாளர் ரோசன்னா லா (Rosanna Law), இந்த ரத்து […]

உலகம் ஐரோப்பா செய்தி

பதின்ம வயதில் நேர்ந்த கொடூரம்: பிபிசி வானொலியில் அரசி கமிலா உருக்கமான வாக்குமூலம்

  • December 31, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசி கமிலா, தனது பதின்ம வயதில் இரயிலில் பயணம் செய்தபோது பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக முதன்முறையாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பிபிசி (BBC) வானொலியில் ஒளிபரப்பான பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். கடந்த ஜூலை மாதம், தனது மனைவி மற்றும் இரு மகள்களைப் பறிகொடுத்த பிபிசி வர்ணனையாளர் ஜோன் ஹண்டின் (John Hunt) துணிச்சலான போராட்டமே, நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்த தனது வலியைப் பேசத் தூண்டியதாக அரசி குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் […]

உலகம் செய்தி

கலீதா ஜியாவின் இறுதி அஞ்சலி – டாக்காவில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்

  • December 31, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் திரண்டனர். பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, உடல் நலக்குறைவால் தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். தேசியக் கொடியால் மூடப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளாக ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் […]

இலங்கை செய்தி

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை

  • December 31, 2025
  • 0 Comments

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ருவன் குமார, சமீர லியனகே மற்றும் கே. ஜெயதிலக ஆகியோர் நன்கொடை கையளிக்கும் நிகழ்வில் கலந்து […]

இலங்கை

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!

  • December 31, 2025
  • 0 Comments

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம். எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இன்று (31) சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது ஐஸ் போரைப் பொருள் 12 கிரேம் 08 […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பியின் நகரசபை தலைவர் ராஜினாமா! பின்னணியில் அரசியல் அழுத்தமா?

  • December 31, 2025
  • 0 Comments

மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமஆராச்சி தனது பதவியை இன்று (31) ராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே மினுவாங்கொடை நகரசபையில் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்று விசேட சபை அமர்வு இடம்பெற்றவேளையிலேயே பதவி விலகும் அறிவிப்பை நகர சபை தலைவர் விடுத்தார். மினுவாங்கொடை நகரசபை வரலாற்றில், தலைவரொருவர் பதவி விலகுவது இதுவே முதன்முறையாகும். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாகவும், தனக்கு அரசியல் ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்று நகர சபை தலைவர் அசேல […]

ஐரோப்பா

பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை நிலைநிறுத்தும் புட்டின்!

  • December 31, 2025
  • 0 Comments

பெலாரஸில் (Belarus) அணுசக்தி திறன் கொண்ட இடைநிலை தூர ஓரெஷ்னிக் (Oreshnik) ஏவுகணைகளை நிலைநிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளாடிமிர் புடினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் புட்டினின் […]

உலகம் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிப்பு

  • December 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் 2025-ஆம் ஆண்டு நிலவிய கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, புல்வெளிகள் மற்றும் காடுகளில் சுமார் 27,000 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த வசந்த காலத்தில் மட்டும் தீ விபத்துகள் முந்தைய ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. டார்செட், வில்ட்ஷயர் உள்ளிட்ட பத்து தீயணைப்பு நிலையங்கள் தங்கள் வரலாற்றிலேயே அதிகபட்ச பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், சிகரெட் துண்டுகள் மற்றும் […]

அரசியல் செய்தி

கொழும்பு மாநகர சபையில் அரசியல் டீல்: மனசாட்சி எங்கே?

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் “டீல்” மூலமே கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் குற்றஞ்சாட்டினார். அன்று மனசாட்சி குறித்து பேசிய மேயர், இன்று கண்ணாடி முன் சென்று தனது மனசாட்சி குறித்து வினவவேண்டும் எனவும் அவர் கூறினார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரிசா சாருக் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவினரை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் உலகம் ஐரோப்பா செய்தி

பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு ‘சேர்’ பட்டம்: பிரிட்டன் மன்னரின் உயரிய கௌரவம்

  • December 31, 2025
  • 0 Comments

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2026-ஆம் ஆண்டிற்கான பிரித்தானிய மன்னரின் உயரிய ‘நைட்’ (Knight Bachelor) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உயர்கல்வித் துறையில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கக் கொள்கைகளை (Inclusion) முன்னெடுத்தமைக்காக இந்த ‘சேர்’ பட்டத்தைப் பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டு லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராகப் பொறுப்பேற்ற இவர், 69 சதவீத சிறுபான்மை இன மாணவர்களைக் […]

error: Content is protected !!