அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் அரசியல் புயலை கிளப்பிவிட்டுள்ள ஆங்கில பாடத்திட்டம்: பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்து!

  • January 1, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச Wimal Weerawansa. தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாடப்புத்தகத்துக்கான மாதிரியில் வயது வந்தோருக்கான இணையத்தள முகவரி அச்சிடப்பட்டுள்ள விவகாரம் இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக கல்வி மறுசீரமைப்பை சீர்குலைக்கும் வகையில் இது விடயத்தில் சதி இடம்பெற்றுள்ளதா என கல்வி […]

உலகம்

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா எடுத்துள்ள முயற்சி : HIV பரவல் குறித்து கவலை!

  • January 1, 2026
  • 0 Comments

சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதற்கமைய சீன மக்கள் கருத்தடை சாதனங்களுக்கு 13% விற்பனை வரியை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக காணப்படும் சீனா, பிறப்பு விகிதத்தில் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகக் குறைந்துவிட்டதாகவும், 2024 இல் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்நிலையில் […]

உலகம் செய்தி

சீனாவின் பாரிய போர் பயிற்சி குறித்து ஆஸ்திரேலியா, ஜப்பான் அதிருப்தி!

  • January 1, 2026
  • 0 Comments

தாய்வானை Taiwan சுற்றியுள்ள பகுதியில் சீனா China பாரிய போர் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பில் ஆஸ்திரேலியா Australia கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்படி நடவடிக்கையானது பிராந்திய பதற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தாய்வான் மற்றும் சீன விவகாரமானது இராஜதந்திர முயற்சிமூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு தீவே தாய்வானாகும். எனினும், தாய்வான் தமது நாட்டில் ஒரு பகுதியென சீனா வாதிட்டுவருகின்றது. […]

ஐரோப்பா செய்தி

துருக்கியில் நேற்றும் 25 மாகாணங்கள் சுற்றிவளைப்பு – பலர் கைது!

  • January 1, 2026
  • 0 Comments

துருக்கிய அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய அரசு உறுப்பினர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய நேற்றைய தினம் 25 மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் ஏறக்குறைய 125 பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில்  இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுவதும் ஐ.எஸ் அமைப்பினர் குறித்த கரிசனை அதிகரித்துள்ளது. இஸ்லாமிய […]

அரசியல் இலங்கை செய்தி

தாய் வீடு திரும்புகிறார் சஜித்: சாவிக் கொத்தை கையளிப்பாரா ரணில்?

  • January 1, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார். கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஒரு குடையின்கீழ் இருந்த கட்சிதான் தற்போது இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. எனவே, மீள் இணைவு என்பது கடினமாக இருக்காது. இரு கட்சிகளின் கொள்கைகளும் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • January 1, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் நேற்று கச்சா எண்ணெயின் விலை 20 சதவீதம் இழப்பை பதிவு செய்துள்ளது. போர்கள், அதிக கட்டணங்கள், OPEC+ உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் இந்நடவடிக்கைகள் உந்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 19 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்தது. அதேபோல் யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் (U.S. West Texas) இடைநிலை கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 20 சதவீதம்  […]

ஐரோப்பா

பின்லாந்து கடற்பகுதியில் தொலைத்தொடர்பு கேபிளில் சேதம் – கைப்பற்றப்பட்ட கப்பல்!

  • January 1, 2026
  • 0 Comments

பின்லாந்து வளைகுடாவில் கடலுக்கடியில்  நேற்று தொலைத்தொடர்பு கேபிளில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பலை பின்லாந்து அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்ததாக எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பின்லாந்தின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் அக்கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர். ஹெல்சின்கி (Helsinki) காவல்துறையினர்  மோசமான குற்றவியல் சேதம்,   குற்றவியல் சேத முயற்சி மற்றும் தொலைத்தொடர்புகளில் மோசமான குறுக்கீடு என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

6 ஆம் திகதி கூடுகிறது அதிஉயர் சபை: அவசரகால சட்டம், தெரிவுக்குழு பற்றி ஆராய்வு!

  • January 1, 2026
  • 0 Comments

புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படவுள்ளது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் பிரேரணை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. […]

இலங்கை செய்தி

அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய சஜித் பிரேமதாசவின் புத்தாண்டு உரை.

  • December 31, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் புத்தாண்டு உரையில் “வெற்று வாக்குறுதிகள் அல்ல, உண்மையான மாற்றமே தேசத்தின் தேவை!” மேலும் 2025 இறுதியில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என அவர் சாடினார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 2025-ல் அமுல்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் சாதாரண மக்களின் முதுகெலும்பை உடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2026-ல் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) […]

உலகம் செய்தி

சிரியாவில் தற்கொலை படை தாக்குதல் – ஒருவர் மரணம்

  • December 31, 2025
  • 0 Comments

சிரியாவின்(Syria) அலெப்போவில்(Aleppo) காவல்துறை அதிகாரிகள் குழு மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் மாநில செய்தி நிறுவனமான சனா(SANA) தெரிவித்துள்ளது. புத்தாண்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அலெப்போவின் வரலாற்று மையத்திற்கு அருகிலுள்ள பரபரப்பான நகரத்தின் பாப் அல்-ஃபராஜ்(Bab al-Faraj) பகுதியில் தாக்குதல் நடத்தியவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் சென்ற போது குறித்த நபர் வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக […]

error: Content is protected !!