இலங்கை செய்தி

நிதி முகாமைத்துவத்தில் வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பதிப்பு

  • January 1, 2026
  • 0 Comments

இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதியை மிக வினைத்திறனாகப் பயன்படுத்தியதில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்து, பௌதீக ரீதியில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ஆர்.சிவரூபன் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 1, 2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், 2026ஆம் ஆண்டுக்காக வடக்கு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அமெரிக்க துருப்புகள் உக்ரைனில் களமிறக்கப்படுமா? – புதிய வியூகம் வகுத்த ஜெலென்ஸ்கி! !

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்று வரும் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க துருப்புக்களை உக்ரைனில் தங்கவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தில் உக்ரைன் 90 சதவீதம் அண்மையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க துருப்புகளை நிறுத்துவதற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே  துவாப்ஸில் (Tuapse) உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிளாக்பூலில் 90 மில்லியன் பவுண்ட் திட்டத்திற்காக 400 வீடுகள் இடிப்ப

  • January 1, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான பிளாக்பூலில் (Blackpool), 90 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்திற்காக 400 வீடுகள் இடிக்கப்படவுள்ளன. வரும் கோடைகாலத்தில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தால், சுமார் 250 குழந்தைகள் உட்பட 800-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. பழைய வீடுகளுக்குப் பதிலாக 230 புதிய நவீன வீடுகள் கட்டப்படும் என உள்ளூர் கவுன்சில் கூறினாலும், இது ஏழை மக்களை வீதியில் நிறுத்தும் செயல் என சமூக […]

இலங்கை செய்தி விளையாட்டு

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி அறிவிப்பு: யாழ்ப்பாண வீரருக்கு வாய்ப்பு

  • January 1, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது. நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கு, கொழும்பு ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் விமத் தின்சார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியின் கவிஜ கமகே துணைத் தலைவராகச் செயல்படுவார். இந்த அணியில் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த […]

ஐரோப்பா

புத்தாண்டு தினத்தில் இடிந்து விழுந்த ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) தேவாலயம்!

  • January 1, 2026
  • 0 Comments

நெதர்லாந்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) தேவாலயத்தில்  இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்ட நிலையில் குறித்த ஆலயம் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கட்டிடம் முழுவதும் தீப்பிழம்புகள் வேகமாக பரவுவதையும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றுவதையும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகள் காட்டுகின்றன. இந்நிலையில் குறித்த தேவாலயத்தை சுற்றி வசித்து வந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 154 ஆண்டுகள் பழமையான […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெடி விபத்து – 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

  • January 1, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் மதுபான விடுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana)  உள்ள  விடுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்புடைய செய்தி (BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!  

இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி: தலதா மாளிகையிலும் வழிபாடு!

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். அத்துடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும் பெற்றார். தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு , புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து,மல்வத்து விகாரைக்கு ஜனாதிபதி சென்றார். மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் நீரிழிவு நோய் சிகிச்சையில் இன ரீதியான பாகுபாடு ; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

  • January 1, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் தெற்காசிய வம்சாவளி மக்கள், நீரிழிவு நோய்க்கான நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் சி.ஜி.எம் (CGM) கருவிகள், வெள்ளை இனத்தவர்களுக்கே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. குறைந்த அளவு கருவிகள் வழங்கப்படும் பகுதிகளில் 17.5 சதவீத சிறுபான்மையினர் வாழ்கின்றனர். ஆனால், அதிக கருவிகள் வழங்கப்படும் இடங்களில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 5.3 சதவீதமே உள்ளது. இனம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளே இந்த இடைவெளிக்கு […]

உலகம்

அமெரிக்க துருப்புகளை தன்னிச்சையாக பயன்படுத்தும் ட்ரம்ப் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • January 1, 2026
  • 0 Comments

சிகாகோ (Chicago) மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த தேசிய காவல்படை துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். காவல் பணிக்கு துருப்புக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குற்றங்கள் மீண்டும் உயரத் தொடங்கும் போது, ​​நாங்கள் மிகவும் மாறுபட்ட மற்றும் வலுவான வடிவத்தில் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் புதிய கூட்டுத் தடுப்பூசி முறை இன்று முதல் அமுல்

  • January 1, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு குழந்தை முறையான தடுப்பூசி இன்றி பள்ளிக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் இனி வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த உள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கான 95 சதவீதத்தை எட்ட முடியாத நிலையில், அடுத்த வாரம் முதல் லண்டன், மிட்லாண்ட்ஸ் உள்ளிட்ட 12 பகுதிகளில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்குகிறது. ஜிபி (GP) எனப்படும் பொது மருத்துவரிடம் பதிவு செய்யாதவர்கள் மற்றும் பயணச் சிக்கல் உள்ள குடும்பங்களை இலக்காகக் […]

error: Content is protected !!