இலங்கை செய்தி

கொம்பனித்தெருவில் அதிரடி சோதனை -150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

  • January 1, 2026
  • 0 Comments

கொம்பனித்தெருவில் நடத்தப்பட்ட சோதனையின் போது,150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​ஹெரோயின், கொகைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மெத்தம்பேட்டமைன் (ICE) வைத்திருந்த  சந்தேக நபர் ஒருவரை முதலில் கைது செய்ததாகவும், அவர் வழங்கிய தகவலின் பேரில் மற்றவர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக […]

இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணத்துடன் கல்வி அமைச்சின் 2026 புத்தாண்டு ஆரம்பம்

  • January 1, 2026
  • 0 Comments

2026ஆம் ஆண்டின் புத்தாண்டை கல்வி அமைச்சு, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் மனிதாபிமான நடவடிக்கையுடன் ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமைச்சின் ஊழியர்கள் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினர். புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில், கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (01) விசேட நிகழ்வொன்று நடைபெற்றது. இதன்போது, பேரிடரால் உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்பு பணிகளில் உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”

  • January 1, 2026
  • 0 Comments

“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்திய இளைஞர் – குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

  • January 1, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெர்த் (Perth) அருகே  இன்று காட்டுத்தீயை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லூக் ஜோசப் க்ர்குரிக் (Luke Joseph Grguric) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் செயலை  பொறுப்பற்றது என வழக்குறைஞர்கள் விமர்சித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். காய்ந்த புல்லில் பட்டாசு கொழுத்தியதன் மூலம் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்  அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய […]

இலங்கை செய்தி

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு கேள்விக்குறி

  • January 1, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பெற்றுள்ள சைபர் முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில்  12,650 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது சைபர் சம்பவங்களின் முக்கிய காரணமாக மாறியுள்ளதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது. போலி கணக்குகள், சமூக ஊடக கணக்கு கையகப்படுத்துதல் மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகள் அதிகமாக முறைப்பாடளிக்கப்படும் பிரச்சினைகளாக உள்ளன. ஒன்லைன் துன்புறுத்தல், தவறான உள்ளடக்கம் […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்ற ஏற்பாடு குறித்து கேட்டறிந்தார் அநுர!

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று மக்களிடம் நலன் விசாரித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி ஸ்ரீ சுதர்ஷனாராமய […]

இலங்கை செய்தி

மறுமலர்ச்சி திட்டம் – 76 கிராமப்புற வீதிகளில் பணிகள் ஆரம்பம்

  • January 1, 2026
  • 0 Comments

கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மறுமலர்ச்சிக்கான பாதை திட்டத்தின் கீழ், 76 கிராமப்புற வீதிகளில் மேம்பாட்டுப் பணிகள் இன்று (01)  முதல் தொடங்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிராமப்புற அளவிலான இணைப்பை வலுப்படுத்தவும், சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் முயற்சிக்கும் இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 5,000 மில்லியன்  ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதன் […]

இலங்கை செய்தி

வவுச்சர்கள் கிடையாது – 1.5 இலட்சம் மாணவர்களுக்கு உள்நாட்டுத் தயாரிப்பு பாதணிகள்

  • January 1, 2026
  • 0 Comments

250 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வவுச்சர்களுக்குப் பதிலாக, தரமான உள்நாட்டு உற்பத்தியிலான பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்னிலையில் கல்வி அமைச்சில் கையெழுத்தானது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் 9 உள்நாட்டு பாதணி உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1,302 […]

ஐரோப்பா

சுவிஸ் வெடி விபத்து – பிரித்தானியர்கள் உதவி பெற விசேட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!

  • January 1, 2026
  • 0 Comments

சுவிஸில் ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரஜைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக  பெர்னில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இங்கிலாந்து வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) நடந்த பயங்கரமான சம்பவத்தில்,  காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரித்தானியருக்கும் ஆதரவளிக்க தூதரக ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரக உதவி தேவைப்படும் பிரித்தானியர்கள் + […]

இலங்கை செய்தி

நிதி முகாமைத்துவத்தில் வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பதிப்பு

  • January 1, 2026
  • 0 Comments

இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதியை மிக வினைத்திறனாகப் பயன்படுத்தியதில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்து, பௌதீக ரீதியில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ஆர்.சிவரூபன் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 1, 2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், 2026ஆம் ஆண்டுக்காக வடக்கு […]

error: Content is protected !!