ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியாவை இணைக்க உருவாகும் புதிய சட்டமூலம்!

  • January 7, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் , பிரித்தானியாவை மீளவும் இணைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் புதிய சட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துடன் இங்கிலாந்தை இணக்கப்படுத்த அமைச்சர்களுக்கு போதுமான  அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. பிரெக்ஸிட் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படும் இந்த சட்டமூலம் உணவுத் தரநிலைகள், விலங்கு நலன் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்ற சில விதிகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு ஏற்ப பிரித்தானிய அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை […]

இலங்கை செய்தி

சாரா ஜஸ்மின் எங்கே?

  • January 7, 2026
  • 0 Comments

புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும் அதனை நம்ப முடியாது. அவர் தப்பி சென்றிருக்கக்கூடும். அவர் இந்தியாவில் இருக்கின்றார் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறி இருந்தனர். பாதாள குழு […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து தாயம் திரும்புகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung, எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், இலங்கையில் நான்கு ஆண்டுகள் சேவையாற்றினார். ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள 39 இராஜதந்திரிகள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கொழும்பிலிருந்து வாஷிங்டன் செல்கின்றார். ஜுலி சங், இலங்கை அரசியல் களத்தில் எப்போதும் பேசுபொருளாக இருந்த […]

உலகம்

ஈரானில் இடம்பெறும் தொடர் போராட்டங்கள் – 36 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

  • January 7, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேற்படி போராட்டத்தில் 34  பொதுமக்களும், இரு பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை, ஆனால் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டு 31 மாகாணங்களில் இடம்பெற்று வரும் குறித்த போராட்டங்களால் இதுவரை 60 […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய இராணுவத் தளபதி!

  • January 7, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi, இலங்கை வந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை இராணுத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே Major General D.K.S.K. Dolage வரவேற்றார். இந்திய தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவரது விஜயம் அமைந்துள்ளது. இந்திய இராணுவத் தளபதி, இலங்கையின் மூத்த இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைச் இன்று […]

இலங்கை

மட்டக்களப்பு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – மக்களுக்கு எச்சரிக்கை!

  • January 7, 2026
  • 0 Comments

நாட்டின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்ந்து நாளை (08) இலங்கையின் கிழக்கு கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார். இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் மழை மற்றும் காற்று நிலைமைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • January 7, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் ஒரு வலுவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நகரமான  பாகுலின் ( Baculin ) இருந்து 68 கிலோமீட்டர் கிழக்கே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும்  வெளியாகவில்லை.

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்து!

  • January 7, 2026
  • 0 Comments

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு எவரும் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். நிலைமை இவ்வாறு இருக்கையில் எதற்காக அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது என்ற […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

“புலி வாலை பிடித்த கதை” – பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா வகுத்த புதிய திட்டம்!

  • January 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான நோக்கத்துடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்  ஆகிய நாடுகள் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. பாரிஸில் உக்ரைனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேற்படி பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவவும், ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் அறிவித்துள்ளார். நட்பு நாடுகள் உக்ரைனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும்  போர் […]

உலகம் முக்கிய செய்திகள்

கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டங்களை வகுக்கும் ட்ரம்ப் : அதிகாரிகளுடன் ஆலோசனை!

  • January 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பில் திட்டங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,  இராணுவத்தை பயன்படுத்துவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது “தேசிய பாதுகாப்பு முன்னுரிமை” என வெள்ளை மாளிகை பிபிசியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த முக்கியமான வெளியுறவுக் கொள்கை இலக்கை […]

error: Content is protected !!