ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ‘பேய் சிறை’ சர்ச்சை: £100 மில்லியன் வரிப்பணம் வீணாகும் அபாயம்

  • January 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் டார்ட்மூர் சிறைச்சாலையில் நிலவும் நச்சு வாயு அபாயம் தெரிந்திருந்தும், 10 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நீதியமைச்சின் முடிவினால் வரி செலுத்துவோரின் 100 மில்லியன் பவுண்டுகள் வீணடிக்கப்படவுள்ளதாகப் நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. அதிக கதிர்வீச்சு கொண்ட ரேடான் (Radon) வாயு கசிவு காரணமாக 2024-இல் மூடப்பட்ட இந்தச் சிறைக்கு, தற்போது ஒரு கைதி கூட இல்லாத நிலையில் ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் வாடகை மற்றும் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படுகிறது. 2033-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்திலிருந்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா முழுவதும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை

  • January 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பெரும்பகுதியை கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி வாட்டி வரும் நிலையில், நாடு முழுவதும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், ஆண்டின் முதல் புயலான ‘கோரெட்டி’ (Storm Goretti) நாளை வியாழக்கிழமை பிரித்தானியாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் வேல்ஸ் மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில் 5 முதல் 20 […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியாவில் கோரத் தாண்டவமாடும் காட்டுத்தீ: ‘உடனடியாக வெளியேறுங்கள்’ என மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • January 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள அப்பர் முர்ரே (Upper Murray) பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மவுண்ட் லாசன் (Mt Lawson) தேசியப் பூங்கா அருகே சுமார் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தத் தீ, தற்போது அதிவேகமாக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக பங்கில், கிரானியா மற்றும் தோலோகோலாங் பகுதி மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ‘விக் எமர்ஜென்சி’ (VicEmergency) […]

செய்தி விளையாட்டு

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக விக்ரம் நியமனம்

  • January 7, 2026
  • 0 Comments

எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இலங்கை அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் (Vikram Rathour) நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024-ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றி, இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர், தற்போது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகச் செயற்பட்டு வருகிறார். எதிர்வரும் ஜனவரி 15-ஆம் திகதி அவர் […]

விளையாட்டு

பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி!

  • January 7, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது அணி பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துமாறு பங்களாதேஷ் அணி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ICC எனப்படுகின்ற சர்வதேச கிரிக்கெட் சபையாலேயே மேற்படி கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்கள்மீதான தாக்குதலுக்கு இந்தியா போர்க்கொடி தூக்கியுள்ளது. தாக்குதல் தொடர்வதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையின் பிரகாரம், இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த […]

அரசியல் இலங்கை செய்தி

கஜேந்திரகுமாரை உடன் இடைநிறுத்துங்கள்: அர்ச்சுனா முறைப்பாடு!

  • January 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு gajendrakumar Ponnambalam எதிராக சபாநாயகரிடம் இன்று (7) முறைப்பாடு செய்துள்ளார் அர்ச்சுனா எம்.பி. Archuna. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார் அர்ச்சுனா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “புற்றுநோயால் உயிரிழந்த எனது தாய் தொடர்பில் அநாகரீகமாக […]

இந்தியா

மோடியின் சொந்த மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை – பலர் ஆபத்தான நிலையில்!

  • January 7, 2026
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான காந்திநகரில், குடிநீர் பிரச்சினையால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 133 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குஜராத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காந்திநகரில் குடிநீர் மாசுப்பாடு காரணமாக  பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேர் தற்போது  மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் குழாய் வலையமைப்பில் குறைந்தது 21 கசிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இது கழிவுநீர் மூலம் மாசுபடுவதற்கு வழிவகுத்தது என்று உள்ளுர் ஊடகங்கள் […]

உலகம்

ஜப்பானில் மாணவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை வழக்குகள் – புதிய பிரச்சாரம் ஆரம்பம்!

  • January 7, 2026
  • 0 Comments

ஜப்பானில் இளம் வயதினரிடையே தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புதிய பிரச்சாரத்தின் கீழ், துன்பத்தில் இருக்கும்போது குழந்தைகள் பெரியவர்களிடம் வசதியாக ஆலோசனை நடத்தக்கூடிய சூழல்களை உருவாக்குவதை தன்னார்வலர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஜப்பானில் ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் குறைந்திருந்தாலும், சுகாதார அமைச்சக தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தொடக்க மற்றும் சீனியர் உயர்நிலை பாடசாலைகளைச் சேர்ந்த 527 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டார் சஜித்!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் தலைமையில் ஆராய்வு!

  • January 7, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (07) நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்வி மறுசீரமைப்பு முறையாக இடம்பெறாமை, தரம் ஆறு ஆங்கில பாட புகத்தகத்தில் ஏற்பட்ட தவறு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே கல்வி அமைச்சரான பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. மனோ கணேசன் உட்பட எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற […]

error: Content is protected !!