ஐரோப்பா

ஈரானுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் – கொடியை அகற்றியதால் பதற்றம்!

  • January 11, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் கென்சிங்டனில் (Kensington) நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த ஆர்ப்பாட்டத்தில் 500 முதல் 1,000 பேர் வரை கலந்துகொண்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியை  அகற்றியுள்ளார். இது தொடர்பான காணொளி எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. குறித்த நபர் கட்டிடத்தின் மீது ஏறி தற்போதைய ஈரானிய கொடியை அகற்றியதுடன், இஸ்லாமியப் […]

ஆஸ்திரேலியா செய்தி

இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தணிக்கை”: நீக்கப்பட்ட எழுத்தாளர் ரண்டா கடும் சாடல்

  • January 11, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் புகழ்மிக்க அடிலெய்ட் (Adelaide) எழுத்தாளர் விழாவிலிருந்து, பாலஸ்தீனிய-ஆஸ்திரேலிய எழுத்தாளர் ரண்டா அப்தெல்-பத்தா (Randa Abdel-Fattah) நீக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கலாச்சார உணர்திறன்’ அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விழா வாரியம் கூறினாலும், இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் தணிக்கை என ரண்டா குற்றம் சாட்டியுள்ளார். இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இதுவரை 70-க்கும் மேற்பட்ட சர்வதேச எழுத்தாளர்கள் விழாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, 2024-ஆம் ஆண்டு யூத எழுத்தாளர் ஒருவர் நீக்கப்பட்டதாகத் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் போல்டனில் கோர விபத்து – நால்வர் பலி

  • January 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் போல்டன் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து விகன் (Wigan)வீதியில் இன்று இடம்பெற்றதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி

கிரீன்லாந்துக்கு அனுப்பப்படும் இங்கிலாந்தின் துருப்புகள்?

  • January 11, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோ நட்பு நாடுகளுடன் இங்கிலாந்து இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிரீன்லாந்து தீவுக்கு இங்கிலாந்தின் துருப்புகள் அனுப்பப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி கிரீன்லாந்தை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்ற நிலையில், இராணுவ பலத்தை பிரயோகிப்பதை மறுக்கவில்லை. இந்நிலையிலேயே மேற்படி துருப்புகள் அனுப்பபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக  ஆர்க்டிக் பிராந்தியத்தை  பாதுகாப்பது பற்றிய விவாதங்கள் மற்றும் நேட்டோவோடு இணைந்து பணியாற்ற வேண்டிய வழக்கமான பணியின் நிமித்தமாகவும் […]

ஆஸ்திரேலியா செய்தி

குயின்ஸ்லாந்தை நிலைகுலையச் செய்த சூறாவளி: கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

  • January 11, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ‘கோஜி’ (Koji) சூறாவளி இன்று காலை கரையை கடந்துள்ளது. ஏயர் (Ayr) மற்றும் போவன் (Bowen) நகரங்களுக்கு இடையே கரையை கடந்த இந்த சூறாவளியால், மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்து வருகின்றது. இதனால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதோடு, சுமார் 15,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ஒரு தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட இதுவரை ஏழு பேர் […]

ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

உலக சாதனை முயற்சி: ஹங்கேரி எல்லையை அடைந்த அவுஸ்திரேலிய வீரர்

  • January 11, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பாராசூட் வீரர் கார்ல் புஷ்பி (Karl Bushby), கடந்த 1998-ஆம் ஆண்டு சிலியில் தொடங்கிய தனது 36,000 மைல் உலக நடைபயணத்தின் இறுதி அடியை எட்டியுள்ளார். எந்தவொரு வாகனத்தையும் பயன்படுத்தாமல், கடல் மற்றும் நிலப்பரப்புகளைக் கடந்து வந்துள்ள அவர், தற்போது ஹங்கேரி – ஆஸ்திரிய (Hungary -Austrian) எல்லையை அடைந்துள்ளார். விசா கெடுபிடிகள் காரணமாக தற்போது மெக்சிகோவில் ஓய்வெடுத்து வரும் கார்ல், வரும் மார்ச் மாதம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கி ஆஸ்திரியா, ஜெர்மனி, […]

ஐரோப்பா

உக்ரைனின் மற்றுமொரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படையினர்!

  • January 11, 2026
  • 0 Comments

உக்ரைனின் தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள பிலோஹிரியா (Bilohirya ) கிராமத்தை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளன. ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள வோரோனெஷ் (Voronezh) கரத்தின் மீது ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் 17 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும்,  இந்த தாக்குதலின்போது 10 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிப்பிற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் ரஷ்யா தனது சக்திவாய்ந்த […]

உலகம் செய்தி

அலெப்போ மோதல் – பின்வாங்க ஒப்புக்கொண்ட SDF படைகள்

  • January 11, 2026
  • 0 Comments

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் அரசாங்கப் படைகளுடன் பல நாட்கள் நடந்த கடும் மோதல்களுக்குப் பிறகு, சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) போர்நிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழ், நகரிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் பேருந்துகள் மூலம் பின்வாங்கும் நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அலெப்போ நகரம் SDF போராளிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளதாக அந்த நகரின் ஆளுநர் அஸ்ஸாம் அல்-கரிப் தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் பலர் உயிரிழந்ததாகவும், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியத் தூதர் பதவி பறிபோன பின் லார்ட் வழங்கிய முதல் நேர்காணல்

  • January 11, 2026
  • 0 Comments

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) உடனான நட்புக்காக அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட லார்ட் மேண்டல்சன் (Lord Mandelson), எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். பிபிசி-க்கு வழங்கிய நேர்காணலில், எப்ஸ்டீனின் வசிப்பிடங்களில் தான் இருந்தபோது வயதான பணிப்பெண்களைத் தவிர வேறு எவரையும் பார்க்கவில்லை என்றும், அவரது பாலியல் வாழ்க்கையிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அவர், பெண்களைப் பாதுகாக்கத் தவறிய கட்டமைப்புக்காகத் தான் […]

உலகம்

பாகிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த சோகம் – புதுமணத் தம்பதிகள் உட்பட 08 பேர் பலி!

  • January 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில்  இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் புதுமணத் தம்பதிகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது வீட்டில் திருமணத்தில் கலந்துக்கொண்ட உறவினர்கள் இருந்ததாக இஸ்லாமாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவத்தால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பாகிஸ்தானில் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த இயற்கை எரிவாயு அழுத்தம் காரணமாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், […]

error: Content is protected !!