செய்தி பொழுதுபோக்கு

எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி? ; புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்திய சிரஞ்சீவி

  • January 12, 2026
  • 0 Comments

சிரஞ்சீவி (Chiranjeevi) நடிப்பில் வெளியாகியுள்ள ‘மனசங்கர வரபிரசாத் காரு’ (Manasankara Varaprasad Garu) திரைப்படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்க்க, படக்குழுவினர் எடுத்துள்ள அதிரடி முடிவு இந்தியத் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டிஜிட்டல் தளங்களில் படத்திற்கான ரேட்டிங் மற்றும் கருத்துகளைப் பகிர நீதிமன்றம் மூலம் படக்குழுவினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர். டிக்கெட் முன்பதிவு தளங்களில் இதர நடிகர்களின் ரசிகர்கள் பதிவிடும் திட்டமிட்ட எதிர்மறை விமர்சனங்களைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை விஜய் தேவரகொண்டா (Vijay […]

அரசியல் தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையும் அரசியல் ஆயுதமாக்குகிறது அ.தி.மு.க.!

  • January 12, 2026
  • 0 Comments

அ.தி.மு.க . ADMK நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் MGR 109-வது பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 18, 19 ஆகிய திகதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி dappadi Palaniswami இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தாங்கள் […]

உலகம் செய்தி

வெனிசுவேலாவின் ‘தற்காலிக ஜனாதிபதி’ ஆனார்  ட்ரம்ப்

  • January 12, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை வெனிசுவேலாவின் “தற்காலிக ஜனாதிபதி” (Acting President of Venezuela) எனக் குறிப்பிட்டு விக்கிப்பீடியா பக்கத்தின் புகைப்படம் ஒன்றைத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். அண்மையில் அமெரிக்கப் படைகள் நடத்திய ‘Operation Absolute Resolve’ தாக்குதலில் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி தற்போது நியூயோர்க்கில் போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை – 05 இலட்சம் கணக்குகள் நீக்கம்!

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார்  550,000 கணக்குகள் மெட்டாவால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும், முகப்புத்தகத்தில் 173,497 கணக்குகளும்,  த்ரெட்ஸில் 39,916 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் இந்தத் தடை, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் வழிமுறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அவசியம் என்று  வலியுறுத்தப்படுகிறமை […]

ஐரோப்பா செய்தி

ஆதாரமின்றி 20 ஆண்டு சிறைவாசம்: அபு  வழக்கில் பிரித்தானிய உளவுத்துறை சிக்கியது

  • January 12, 2026
  • 0 Comments

குவாண்டானாமோ (Guantánamo Bay) சிறையில் வாடும் அபு சுபைதா (Abu Zubaydah) மீது நடத்தப்பட்ட கொடூர சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், பிரித்தானிய அரசு அவருக்குப் பாரிய தொகையை நஷ்டஈடாக வழங்கியுள்ளது. நீதிமன்றத்திற்கு வெளியே இந்தச் சமரசம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சி.ஐ.ஏ (CIA) இரகசிய சிறைகளில் 83 முறை ‘வாட்டர்போர்டிங்’ (waterboarding) சித்திரவதைக்கு உள்ளான இவரிடம், விசாரணை நடத்துவதற்கான கேள்விகளை பிரித்தானிய உளவுத்துறையான MI5 மற்றும் MI6 வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அல்கொய்தா […]

உலகம்

ஈரானின் உள்விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா : உயர்மட்ட தலைவர்கள் பரிசீலினை!

  • January 12, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக 500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் கிட்டத்தட்ட 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளை சரிபார்த்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]

பொழுதுபோக்கு

இழுபறியில் “ஜனநாயகன்” : திரைக்கு வருகிறது “தெறி”

  • January 12, 2026
  • 0 Comments

தளபதி விஜய் நடித்து பெரும் வசூல் வேட்டை நடத்திய ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் எப்போது வெளிவரும் என்பது இழுபறி நிலையில் உள்ளது. குறித்த படத்தைப் பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில், படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த படம் வெளியாகுமா, இல்லையா என்ற நிலையில், […]

இந்தியா உலகம் செய்தி

இந்தியா சென்றடைந்தார் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக்

  • January 12, 2026
  • 0 Comments

ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அகமதாபாத் சென்றுள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அவர், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் […]

அரசியல் இலங்கை செய்தி

2029 இல் பொது வேட்பாளர் நாமல் ராஜபக்ச?

  • January 12, 2026
  • 0 Comments

“2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார் “ ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் 2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்படாதா? அவ்வாறு எழும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு […]

error: Content is protected !!