இந்தியா

அயோத்திக்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை: கோரிக்கை முன்வைப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

முஸ்லிம் மக்கள், அயோத்தியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், கருவறைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் ராமர் கோயிலில் கடந்த வாரம் முஸ்லிம் இளைஞர் ஒருவர், சால்வை விரித்து தொழுகையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினர் இளைஞரை தடுத்து நிறுத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அயோத்தியைச் […]

உலகம்

கீரின்லாந்து விடயத்தில் அமெரிக்காவோடு போட்டிக்கு நிற்கும் ரஷ்யா!

  • January 13, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆர்க்டிக் தீவைப் பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கிரீன்லாந்து மக்கள் ரஷ்யாவுடன் சேர வாக்களிக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் ( Dmitry Medvedev) நேற்று தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தில் வசிக்கும் 55000 மக்களும் ரஷ்யாவுடன் சேர வாக்களிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என சூளுரைத்துள்ளார். இதற்காக  இராணுவ பலத்தை பிரயோகிப்பதையும் அவர் மறுக்கவில்லை. […]

இலங்கை செய்தி

22 ஆம் திகதி இலங்கை வருகிறது IMF குழு!

  • January 13, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) குழவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொடர்பில் 5ஆவது மீளாய்வு கூட்டத்துக்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என தெரியவருகின்றது.

ஆஸ்திரேலியா

அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இராஜினாமா!

  • January 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர், கெவின் ரூட் Kevin Rudd , தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதம்வரை அவர் வாஷிங்டனில் இருப்பார் எனவும், அதன் பின்னர் பணியை நிறைவு செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் திகதி கெவின் ரூட் இராஜினாமா செய்வார் எனவும், அவரின் கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanes இன்று அறிவித்தார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவை கட்டியெழுப்புவதில் கெவின் ரூட் […]

இலங்கை செய்தி

8 நாட்களுக்குள் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 8 நாட்களுள் மாத்திரம் 67 ஆயிரத்து 762 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் 8 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 367 பேரும், ரஷ்யாவில் இருந்து 8 ஆயிரத்து 425 பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை […]

#Immunity #WinterHealth #HealthTips #ImmuneSystem #ColdAndFlu #HealthyLiving #TamilHealth #ImmunityBooster #நோய்எதிர்ப்புசக்தி #ஆரோக்கியம் #குளிர்காலம் வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழிகள்: குளிர்கால ஆரோக்கியக் குறிப்புகள்.”

  • January 12, 2026
  • 0 Comments

குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து தப்பிக்க, நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு வலிமையாக வைத்திருப்பது என்பது குறித்து இந்த ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது. விட்டமின் மாத்திரைகளை விட, சத்தான உணவுகள் மூலமே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது சிறந்தது. குறிப்பாக விட்டமின்-டி (Vitamin D) மற்றும் நார்ச்சத்து (Fibre) நிறைந்த உணவுகள் அவசியம். மேலும் வறண்ட காற்றில் வைரஸ்கள் எளிதாகப் பரவும். எனவே, வீடுகளில் சரியான ஈரப்பதத்தை (Humidity) பராமரிப்பது காய்ச்சல் […]

#Julie #BiggBossJulie #PremalathaVijayakanth #CaptainVijayakanth #WeddingInvite #TamilNews #Vijayakanth #DMDK #ViralPhoto #JulieMarriage #பிக்பாஸ்ஜூலி #பிரேமலதாவிஜயகாந்த் #திருமணம் இந்தியா செய்தி பொழுதுபோக்கு

“நெகிழ்ச்சி! பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய ஜூலி.”

  • January 12, 2026
  • 0 Comments

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற மரிய ஜூலியானா (ஜூலி), தற்போது தனது திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார். ஜூலி தனது வருங்கால கணவருடன் சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றார். “கேப்டனின் ஆசீர்வாதம் மீண்டும் கிடைத்தது போல் உணர்கிறேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஜூலியின் திருமணம் ஜனவரி 16, 2026 (வெள்ளிக்கிழமை) […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டில் உக்ரைனில் 2,514 பொதுமக்கள் உயிரிழப்பு – ஐ.நா அறிக்கை

  • January 12, 2026
  • 0 Comments

2022ம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைனில்(Ukraine) பொதுமக்களுக்கு கடந்த ஆண்டு மிகவும் ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில், போர் மற்றும் ரஷ்யாவின்(Russia) நீண்ட தூர ஆயுதப் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்ததாக உக்ரைனில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்(United Nations Human Rights) குழு தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், “2025ம் ஆண்டில் உக்ரைனில் குறைந்தது 2,514 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 12,142 பேர் காயமடைந்துள்ளனர்” என்று ஐ.நா கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது 2024 உடன் […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்திக்கும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ

  • January 12, 2026
  • 0 Comments

அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோவை(Maria Corina Machado) சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்(Caroline Leavitt) குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 3ம் திகதி அமெரிக்கப் படைகள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) கைது செய்த பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மதுரோ பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மரியா கொரினா மச்சாடோ டிரம்பைப் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் 28 வயது இந்து ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை

  • January 12, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் இந்து சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்களில் இது சமீபத்தியது. பாதிக்கப்பட்டவர் 28 வயது சமீர் தாஸ்(Sameer Das) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிட்டகாங்கில்(Chittagong) உள்ள தகன்பூயானில்(Dhakhangbhuyan) இரவு இந்த கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் அந்த நபரின் ஆட்டோ ரிக்‌ஷாவைத் திருடி சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். “சமீர் நாட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டுளளார். முதல் பார்வையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட […]

error: Content is protected !!