இலங்கை செய்தி

வடக்கு மண்ணில் தைப்பொங்கலை கொண்டாடும் ஜனாதிபதி அநுர!

  • January 14, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தைப்பொங்கல் தினத்தன்று வடக்குக்கு பயணம் மேற்கொள்கின்றார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ். வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு வட மாகாண தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பார். அத்துடன், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் […]

ஐரோப்பா

டிக்கெட் விலைகளை உயர்த்திய லூவ்ரே அருங்காட்சியகம் – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

  • January 14, 2026
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum) சர்வதேச பார்வையாளர்களுக்கான நுழைவு விலைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.  இதற்கமைய இரண்டு அடுக்கு டிக்கெட் முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பெரும்பாலான குடிமக்கள் 32 யூரோக்கள் (£27) செலுத்துவார்கள். இது முந்தைய விலைகளுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும். வேலைநிறுத்தங்கள், கூட்ட நெரிசல் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய புதுப்பித்தல்கள் மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

“கோ ஹோம் ஹரிணி” என கோஷம் எழுப்பிவிட்டு வெத்து வேட்டாக வீடு திரும்பிய விமல்!

  • January 14, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாகிரகப் போராட்டத்தை விமல் வீரவன்ச Wimal Weerawansa முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், அது தொடர்பில் அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்படுகின்றது. தமது போராட்டம் வெற்றியளித்துவிட்டது என விமல் வீரவன்ச அறிவிப்பு விடுத்தாலும், இது விடயத்தில் வெற்றியென கேள்வி எழுப்படுகின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என்பதே விமல் வீரவன்சவின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன. இவை நடக்கும்வரை தனது […]

ஆஸ்திரேலியா செய்தி

வேகமாகப் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ்

  • January 14, 2026
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் தெற்கு நியூ சவுத் வேல்ஸின் (NSW) ரிவரினா பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) வைரஸ் பரவும் அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சென்டினல் கோழிகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, கொசுக்களால் பரவும் இந்த நோயானது கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை என்றாலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. […]

#Sreeleela #SreeleelaDance #Parasakthi #Sivakarthikeyan #SouthIndianActress #TrendingNow #Bebamma #SreeleelaGallery புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

தென்னிந்தியாவின் டான்ஸிங் குயின் – ஸ்ரீலீலா வைரல் போட்டோஷூட்!

  • January 14, 2026
  • 0 Comments

ஸ்ரீலீலா 2001-ல் அமெரிக்காவின் டெட்ராய்ட் (Detroit) நகரில் பிறந்தார். ஆனால், பெங்களூரில் வளர்ந்ததால் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமை பெற்றவர். சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தனது மருத்துவப் படிப்பை (MBBS) கைவிடாமல் படித்து வருகிறார். திரைத்துறையில் ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்ற மிகச்சில நடிகைகளில் இவரும் ஒருவர். ஸ்ரீலீலா ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞர். 3 வயதில் இருந்தே நடனப் பயிற்சி பெற்றவர். இவரது ‘அரங்கேற்றம்’ 8 வயதிலேயே நடந்து முடிந்தது. இவரது அபாரமான நடனத் […]

உலகம்

கத்தாரில் உள்ள அமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு உத்தரவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், கத்தாரின் (Qatar) அல் உதெய்த் (Al Udeid) தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையிலேயே அமெரிக்க துருப்புக்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அல் உதெய்டில் தற்போது 10,000 துருப்புக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜுன் […]

ஆஸ்திரேலியா செய்தி

தென் அவுஸ்ரேலிய பிரீமியர் மீது அவதூறு வழக்கு

  • January 14, 2026
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற ‘அடிலெய்ட் எழுத்தாளர் விழா’ சர்ச்சைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தென் அவுஸ்ரேலிய பிரீமியர் பீட்டர் மலினாஸ்காஸ் (Peter Malinauskas) மீது பாலஸ்தீனிய எழுத்தாளர் ரந்தா அப்தெல்-பத்தா அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த ஆண்டு விழாவில் பங்கேற்கவிருந்த ரந்தாவின் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து, 180-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் விழாவைப் புறக்கணித்தனர். இதனால் விழா முற்றிலும் ரத்து செய்யப்பட்டதுடன், அதன் இயக்குநரும் பதவிலகினார். இந்நிலையில், தன்னை பயங்கரவாத ஆதரவாளருடன் ஒப்பிட்டு பிரீமியர் பேசிய கருத்துக்கள் தனது […]

உலகம்

“ட்ரம்பால் மட்டுமே புட்டினை தடுக்க முடியும்” – போலந்து ஜனாதிபதி!

  • January 14, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தடுக்கக்கூடிய ஒரே நபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே என போலந்து ஜனாதிபதி கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு உதவுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிபிசி ஊடகத்திற்கு இன்று கருத்து வெளியிட்டுள்ள போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki), ரஷ்யா இன்னும் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே, இந்தச் செயல்பாட்டில் நாம் அவரை ஆதரிக்க […]

கருத்து & பகுப்பாய்வு

“சாதாரண மக்களும் பறக்கலாம்” ஆசை வீண் போனதா? உதான் திட்டத்தின் தோல்விக்கு என்ன காரணம்?

  • January 14, 2026
  • 0 Comments

இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களையும் பெரிய நகரங்களோடு இணைத்து, பொதுமக்களுக்கு விமான சேவையை எளிமையாக்கும் முயற்சி திட்டத்தின் முழுமையான பயன் இன்னும் பெறப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு உதான் (UDAN) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. “சாதாரண மக்களும் பறக்கலாம்” என்ற நோக்குடன் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைத்து, பொது மக்களுக்கான விமான பயணத்தை எளிமையாக்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சில […]

செய்தி பொழுதுபோக்கு

களம்காவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

  • January 14, 2026
  • 0 Comments

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், இயக்குநர் ஜிதின் கே. ஜோஷ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘களம்காவல்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வரும் ஜனவரி 16-ஆம் திகதி சோனி லைவ் (Sony LIV) ஓடிடி தளத்தில் வெளியாகிறது இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், இதில் பல நடிகைகள் சிறிய […]

error: Content is protected !!