இலங்கை செய்தி

இலங்கையில் பாரிய வெளிநாட்டு முதலீடு: அடுத்த மாதம் கொழும்பு வருகிறது சீன குழு!

  • January 17, 2026
  • 0 Comments

சீனா சினோபெக் Sinopec நிறுவனத்தின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கிலேயே அக்குழு கொழும்பு வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வருடம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்குரிய புரிந்துணர்வு MOU ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க மக்களுக்கு அவசர அறிவிப்பு – மீளக் கோரப்படும் குடிநீர் போத்தல்கள்!

  • January 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் ஏறக்குறைய 40000 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் திரும்பப்பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA),   அக்டோபர் 4, 2026 திகதியிடப்பட்ட   39‑222 #3  என்ற லாட் குறியீட்டை கொண்ட போத்தல்களை மீளக் கோருவதாக அறிவித்துள்ளது. குறித்த போத்தல்களில் மிதக்கும் கருப்பு நிற வெளிநாட்டுப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்பட்ட தண்ணீர் போத்தல்கள்  இல்லினாய்ஸ் (Illinois), இந்தியானா (Indiana), கென்டக்கி (Kentucky), மிச்சிகன் (Michigan), ஓஹியோ  […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை ஓயமாட்டோம்: சஜித் அணி திட்டவட்டம்!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார Rohana Bandara தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய ரோஹன பண்டார எம்.பி., “ நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் வரும். […]

இலங்கை

இலங்கையில் மிகக் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு!

  • January 17, 2026
  • 0 Comments

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அங்கு 8.0 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதே நேரத்தில், இன்று காலை பண்டாரவளைப் பகுதியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், பதுளையில் 14.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. பொலன்னறுவை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது.  

இலங்கை செய்தி

டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: விநியோகித்த மூவர் கைது!

  • January 17, 2026
  • 0 Comments

டுபாயில் பதுங்கி இருந்து இலங்கையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிழல் உலக தாதா டுபாய் இஷாரவின் மூன்று சகாக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டம், கம்பளை பகுதியில் வைத்தே கம்பளை பொலிஸாரால் இன்று (17) காலை இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் சகிதம் சிக்கியுள்ள இவர்களிடம் தற்போது பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை கம்பளை பகுதியில் இவர்களே […]

பொழுதுபோக்கு

ஓ.டி.டியில் “சிறை” விடுதலையாகும் திகதி அறிவிப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

” சிறை” படத்தின் ஓ.டி.டி. வெளியீடு தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குடியரசு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சிறை படம் வெளியாகியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், எஸ்.எஸ். லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு […]

உலகம்

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு சிவில் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

  • January 17, 2026
  • 0 Comments

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிவில் விமான நிறுவனங்களை நேற்று  வலியுறுத்தியுள்ளது. ஈரானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அமெரிக்காவின் தலையீடுகளால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல் ஈரானிய வான் பாதுகாப்பை அதிக எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது. இது சிவில் விமானங்களுக்கு தவறான அடையாளத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான ஒழுங்குமுறை ஆணையம் (EASA) விளக்கியுள்ளது. இதேவேளை தெஹ்ரான் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை மிருகத்தனமாக […]

செய்தி

எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தினம் இன்று: பிரதமர் மோடி புகழஞ்சலி!

  • January 17, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகிலுள்ள எம்.ஜி.ஆர் . ரசிகர் மன்றத்தினராலும் பல நாடுகளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் விடியோவொன்றை பதிவிட்டுள்ளார். “ எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது […]

உலகம்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவில் 83 படையினர் பலி!

  • January 17, 2026
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை Nicolas Maduro சிறை பிடிக்கும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையின்போது 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா பாதுகாப்பு அமைச்சரால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி இராணுவ நடவடிக்கையில் 51 வெனிசுலா படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் 32 பேர் கியூபா படையினர் பலியாகியுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மதுரோவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது வெனிசுலாவில் மொத்தம் 83 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் […]

உலகம்

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப ட்ரம்ப் தலைமையில் உதயமாகும் அமைதி வாரியம்!

  • January 17, 2026
  • 0 Comments

காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும்,  புதிய நிர்வாகத்திற்கு மாறுவதையும் மேற்பார்வையிட “அமைதி வாரியம்” ஒன்றை அமைப்பதாக வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுத்த வாரிய உறுப்பினர்களில் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ஜாரெட் குஷ்னர் (Jared Kushner)  மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் (Tony Blair) ஆகியோர் அடங்குவர். இந்த வாரியத்திற்கு ட்ரம்ப் தலைவராக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.  வரும் வாரங்களில் மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

error: Content is protected !!