உலகம்

ஆப்பிரிக்காவில் பணத்துக்காக நடந்த துப்பாக்கிச்சூடு – 07 பேர் பலி!

  • January 17, 2026
  • 0 Comments

தெற்கு ஆப்பிரிக்காவின் மாரிக்கானாவில் (Marikana) இன்று  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயன்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்தாரிகளை காவல்துறையினர் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 30 முதல் 50 வயதுடைய ஆறு ஆண்கள்  கொல்லப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம்

  • January 17, 2026
  • 0 Comments

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம் உலகளாவிய அறிவியல் மற்றும் கலாச்சார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “தூய நிலத்தின் நட்சத்திரம்” (Star of Pure Land) என அழைக்கப்படும் இந்த ரத்தினம் 3,536 கரட் நிறையுடையது. அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது. இந்த கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா […]

ஐரோப்பா செய்தி

ஆய்வுக்குட்படுத்தப்படும் ஆல்டர்னி விமான நிலையத்தின் நிலப்பரப்பு

  • January 17, 2026
  • 0 Comments

ஆல்டர்னி விமான நிலையம் (Alderney Airport) நிலம் மற்றும் முக்கிய கட்டமைப்புகளின் உயர விபரக்குறிப்பை உருவாக்க கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டு வருகிறது. குர்ன்சி கொள்கை மற்றும் வளக் குழு (Guernsey Policy & Resources Committee) திட்டங்களை அங்கீகரித்தால், பிரதான நிலக்கீல் ஓடுபாதையின் (main runway) புனரமைப்பு 2027 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குர்னசி துறைமுகங்களின்படி (Guernsey Ports), ஒப்பந்ததாரரை நியமிக்கும் நோக்கில் வடிவமைப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பு ஆய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது மற்றும் […]

உலகம்

தைவானின் முக்கிய தீவுகளுக்குள் நுழைந்த சீனாவின் உளவு விமானம்!

  • January 17, 2026
  • 0 Comments

தைவானின் வான்வெளியில் சீனாவின் உளவு விமானம் ஒன்று பறந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் சீனக் கடலின் வடக்குப் பகுதியில் உள்ள பிரதாஸ் (Pratas) தீவுகளுக்குள் குறித்த உளவு விமானம் பறந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன கண்காணிப்பு விமானம்  இன்று அதிகாலை 5.41 மணிக்கு பிரதாஸ் தீவுகளுக்குள் நுழைந்ததாகவும், குறித்த பகுதியில் 08 நிமிடங்கள் பறந்ததாகவும்  தைவானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் இந்த செயலை ஆத்திரமூட்டும்  பொறுப்பற்ற செயல் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள தென்கிழக்கு நீர் நிறுவனம்

  • January 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் தென்கிழக்கு நீர் நிறுவனம் (SEW) இந்த வாரம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் (Ofwat) நிறுவனத்துக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளனர். ஆறு வாரங்களில் இரண்டாவது முறையாக சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால், தென்கிழக்கு நீர் நிறுவனத்தின் தலைவரான டேவிட் ஹின்டன் (David Hinton) நாடாளுமன்றத்திற்கு திரும்ப அழைக்கப்பட்டு, எம்.பி.க்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொண்டார். இந்த முறையிலும், தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் […]

ஐரோப்பா செய்தி

மகனின் மரணத்துக்குப் பிறகு டிக்டோக் மீது வழக்கு – பெரும் வேதனையில் தாய்

  • January 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையரைச் (Gloucestershire) சேர்ந்த 49 வயது எலன் ரூம் (Ellen Roome) தனது 14 வயது மகன் ஜூலியன் “ஜூல்ஸ்” ஸ்வீனி (Julian “Jules” Sweeney) 2022 இல் செல்டென்ஹாமில் (Cheltenham) உள்ள வீட்டில் இறந்ததற்குப் பிறகு டிக்டோக் (TikTok) மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவில் நடந்த தனது முதல் விசாரணையை அவர் “ஆழ்ந்த வேதனையானது” என்றும் கூறியுள்ளார். வழக்கு, பிளாக்அவுட் சவால் (Blackout Challenge) போன்ற ஆபத்தான முயற்சிகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களுடன் தொடர்புடையது […]

உலகம்

மரபணு பிறழ்வுகள் – புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்!

  • January 17, 2026
  • 0 Comments

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் மரபணு கோளாறு இனங்காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பெல்ஜியத்தின் யுனிவர்சிட்டி லிப்ரே டி ப்ரூக்ஸெல்ஸ் (ULB) விஞ்ஞானிகளுடன் இணைந்து, எக்ஸிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  (University of Exeter and Belgium’s Université Libre de Bruxelles )  நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட மரபணு கோளாறு இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சீர்குலைப்பதன் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

பொங்கு தமிழ் பிரகடனம்: 25 ஆவது நினைவேந்தல் யாழ். பல்கலையில்!

  • January 17, 2026
  • 0 Comments

யாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று சனிக்கிழமை(17) நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி நினைவு கூர்ந்திருந்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக வெளியிடப்பட்டது. 2001 ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி பொங்கு தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

திருகோணமலை_கொழும்பு வரையான இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

  • January 17, 2026
  • 0 Comments

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை  மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் ரயில் ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ‘புலத்திசி’ நகர கடுகதி ரயிலும் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

புவிசார் அரசியல் : பண்டமாற்று முறைக்கு திரும்பும் உலக நாடுகள்?

  • January 17, 2026
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. டொலரின் மதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்வனவு செய்து குவித்து வருவதே  தங்தக்தின் விலை உச்சம் தொட்டத்திற்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  செர்பியாவின் உயர் பாதுகாப்பு பெல்கிரேட் பெட்டகத்திற்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகள் சுவிஸ் விமான நிலையத்தின்  ஓடுப்பாதையில் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் செர்பியாவின் மத்திய வங்கி ஆளுநருக்கு […]

error: Content is protected !!