ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் அதிரடி சோதனை: 17 பேர் கைது

  • January 18, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் நடத்திய சிறப்பு சோதனையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் 14-ஆம் திகதி வரை சிட்னி, மெல்பேர்ண் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பலரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சிட்னியில் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞரின் கைப்பேசியில் 100-க்கும் மேற்பட்ட AI மூலம் உருவாக்கப்பட்ட துஷ்பிரயோக […]

ஐரோப்பா

ட்ரம்பின் வரி விதிப்பு – அவசரமாக கூடும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள்!

  • January 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்காவிட்டால், பல ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் இன்று ஒன்றுக்கூடவுள்ளனர். ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க, அவசரக் கூட்டத்தை நடத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ள ட்ரம்ப் கிரீன்லாந்து தனது கட்டளைக்கு இணங்காவிட்டால் […]

ஐரோப்பா

தென் அமெரிக்க கூட்டமைப்பு – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

  • January 18, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் அமெரிக்க கூட்டமைப்பான மெர்கோசூர் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் நேற்று பராகுவேயில் (Paraguay) சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர். 25 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு பிராந்தியங்களுக்கிடையில் கட்டணங்களைக் குறைப்பதற்கும் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும் மெர்கோசூர் உறுப்பினர்களான அர்ஜென்டினா (Argentina), பிரேசில் (Brazil) , பராகுவே (Paraguay) மற்றும் உருகுவே ஆகியவற்றின் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்புடன் படுத்து உறங்கிய பெண்!

  • January 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தூங்கி எழும்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தன்மீது கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் (Queensland) பிரிஸ்பேனில் (Brisbane) வசிக்கும் ரேச்சல் ப்ளூர் (Rachel Bloor) என்ற குறித்த பெண் தன்மீது கனமாக ஏதே கிடப்பதாக உணர்ந்ததாகவும், இருப்பினும் அதனை தனது நாய் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ளார். நாயை அரவணைக்க தனது போர்வையின்மேல் கைவைத்தபோதே அது ஒரு மலைப்பாம்பு என்பதை இனங்கண்டதாக கூறியுள்ளார். குறித்த பாம்பு 2.5 மீற்றர் நீளம் வரை இருந்ததாக தெரிவித்த […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பு – ட்ரம்பின் நடவடிக்கையால் ஏற்படும் பதற்றம்!

  • January 18, 2026
  • 0 Comments

08 ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீதம் வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் ட்ரம்பின் மேற்படி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், துருப்புக்களை ஆர்டிக் பகுதிக்கு அனுப்பிவைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி 1 ஆம் திகதி […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் பணியாளரை காப்பாற்ற முயன்ற 55 வயது இந்து நபர் கொலை

  • January 17, 2026
  • 0 Comments

வங்கதேசத்தின்(Bangladesh) காசிபூர்(Ghazipur) மாவட்டத்தில், தனது கடை ஊழியரை தாக்குதலிலிருந்து பாதுகாக்க முயன்ற இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 55 வயதான லிட்டன் சந்திர கோஷ்(Liton Chandra Ghosh) என்ற காளி(Kali), பாராநகர்(Baranagar) சாலையில் உள்ள பைஷாகி ஸ்வீட்மீட் அண்ட் ஹோட்டல்(Baisakhi Sweetmeat and Hotel) என்ற இனிப்புக் கடையின் உரிமையாளர் ஆவார். காவல்துறை கூற்றுப்படி, கடைக்கு வந்த 28 வயதான மாசும் மியாவிற்கும்(Masum Mia) கடையின் 17 வயது ஊழியர் அனந்த தாஸ்(Anant Das) என்பவருக்கும் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு கோரும் பத்திரிகையாளர்கள்

  • January 17, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) உள்ள பத்திரிகையாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இரண்டு முன்னணி தேசிய நாளிதழ்கள் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, காவல்துறை தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் தெற்காசிய நாட்டில் ஊடகத் துறை திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டின் முன்னணி ஆங்கில மொழி நாளிதழான டெய்லி ஸ்டார்(Daily Star) மற்றும் தலைநகர் டாக்காவில்(Dhaka) […]

உலகம் செய்தி

வெனிசுலாவின் தொழில்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இடைக்கால ஜனாதிபதி

  • January 17, 2026
  • 0 Comments

வெனிசுலாவின்(Venezuela) இடைக்கால ஜனாதிபதி, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அலெக்ஸ் சாப்பை(Alex Saab) தொழில்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்(Delcy Rodriguez), கொலம்பிய(Colombia) வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் செய்த சேவைக்காக நன்றி தெரிவித்து அவர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று குறிபிட்டுள்ளார். ஜனவரி 3ம் திகதி மதுரோவை வெளியேற்றிய அமெரிக்க இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வாஷிங்டனின் அழுத்தத்தின் மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது. […]

உலகம் செய்தி

டிரம்பின் திட்டங்களுக்கு எதிராக கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் போராட்டம்

  • January 17, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து(Greenland) மற்றும் டென்மார்க்கில்(Denmark) ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன்(Copenhagen) உள்ளிட்ட பல நகரங்களிலும் கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கிலும்(Nuuk) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு டென்மார்க் தலைநகருக்கு வருகை தந்த பொது பேரணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தனது திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க், நோர்வே(Norway), சுவீடன்(Sweden), […]

உலகம் செய்தி

ஏழாவது முறையாக உகாண்டாவின் ஜனாதிபதியான யோவேரி முசேவேனி

  • January 17, 2026
  • 0 Comments

உகாண்டாவின்(Uganda) தற்போதய ஜனாதிபதி யோவேரி முசேவேனி(Yoweri Museveni) ஏழாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 81 வயதான முசேவேனி 71.65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக ஆணையம் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, அவர் தனது முக்கிய போட்டியாளரான 43 வயதான போபி வைனை(Bobi Wine) தோற்கடித்தார், அவர் 24.72 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 1986ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கும் யோவேரி முசேவேனி இணைய முடக்கம், ராணுவ ஆதிக்கம் போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் […]

error: Content is protected !!