ஐரோப்பா

ஆஸ்திரியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 08 பேர் உயிரிழப்பு!

  • January 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரியாவில் (Austria) தனித்தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 08 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் பனிச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய ஆஸ்திரியாவில் உள்ள ஸ்டைரியாவின் (Styria) முர்டல் (Murtal) மாவட்டத்தில் ஏழு பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது. அவர்களில் 03 பேர் பனிச்சரிவில் சிக்கி முழுமையாக புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் பின் அவர்களை மீட்ட போதும் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக […]

இலங்கை செய்தி

தைப்பொங்கலை வட மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்றத் திட்டம்: மன்னாரில் ஆளுநர் அறிவிப்பு

  • January 18, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் முன்றலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய ‘புதிரெடுத்தல்’ மற்றும் பொங்கலிடும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் கல்வி, சுற்றுலா மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தைப்பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட கொத்மலை பகுதிகளை மீளமைக்கும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

  • January 18, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சீரமைக்கும் பாரிய சிரமதானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்டிருந்த 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சுமார் 2,000-ற்கும் மேற்பட்ட தொண்டர்கள், நாளை வரை இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதன் மூலம் […]

இந்தியா செய்தி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 உள்ளிட்ட துப்பாக்கிகள் கண்டெடுப்பு

  • January 18, 2026
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே, பஞ்சாப் காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து நடத்திய சோதனையில் பெருமளவிலான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டவற்றுள் 3 ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 98 தோட்டாக்களுடன் வெடிமருந்துகளும் அடங்கும். பஞ்சாப் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டுவதற்காக இவை எல்லை தாண்டி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதி ரிண்டா என்பவரே இந்த ஆயுதங்களை அனுப்பியிருக்கலாம் […]

செய்தி

இங்கிலாந்தில் உள்ளுராட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தொழிற்கட்சி – கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்!

  • January 18, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு  29 கவுன்சில்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில்  தொழிற்கட்சி தலைமையிலான அதிகாரிகள் பெரும்பான்மையாக உள்ளனர். உள்ளாட்சி மறுசீரமைப்புக்கான (LGR) வளங்கள் பற்றாக்குறை மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கான செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டே தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள். லிபரல் டெமாக்ரட்டுகள் மற்றும் ரிஃபார்ம் யுகே (Reform UK) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாமதங்களை கடுமையாக விமர்சித்துள்ளன. தொழிற்கட்சி வாக்காளர்களைத் தவிர்ப்பதாகவும் ஜனநாயகத்தை […]

செய்தி தமிழ்நாடு

கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிடுக: சீமான் கடும் எச்சரிக்கை

  • January 18, 2026
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும், அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும் வேரறுக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். பாரம்பரிய மீன்பிடி இடங்களை ‘வெற்று நிலம்’ எனத் தவறாகக் காட்டி அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் […]

இலங்கை செய்தி

2,200 ஊழியர்கள் தவிப்பு: ஜனாதிபதியின் தலையீட்டை கோரி அவசர கடிதம்

  • January 18, 2026
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரியுள்ளனர். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறத் தீர்மானித்து, அதற்கேற்பத் தமது வருங்காலத் திட்டங்களை வகுத்திருந்த போதிலும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமாவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சபை கலைக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி இன்னும் அறிவிக்கப்படாததால், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய சுயதொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாமல் தாம் கடும் […]

உலகம் செய்தி

நைல்நதி நீர் தொடர்பான பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தயார் ; அமெரிக்க ஜனாதிபதி

  • January 18, 2026
  • 0 Comments

நைல் நதி நீர் பங்கீடு தொடர்பாக எகிப்து மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கிடையே நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்க்க, தான் மத்தியஸ்தம் வகிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசிக்கு அவர் அனுப்பியுள்ள விசேட கடிதத்தில், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நைல் நதியின் துணை நதியில், எத்தியோப்பியா சுமார் 5 பில்லியன் டொலர் செலவில் பிரம்மாண்டமான அணையொன்றை (GERD) […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய மசோதாவைத் பிரிக்க தீர்மானம்

  • January 18, 2026
  • 0 Comments

போண்டி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ‘வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கிச் சட்ட மசோதாவை’ப் பல பகுதிகளாகப் பிரிக்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார். எதிர்க்கட்சியும் பசுமைக் கட்சியும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை எதிர்த்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்கும் பகுதிகளை மட்டும் தனித்தனியாக நிறைவேற்ற அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய துப்பாக்கி திரும்பப் பெறும் திட்டத்திற்குத் தனி மசோதாவும், வெறுப்புப் பேச்சு மற்றும் விசா ரத்து தொடர்பான குடியேற்றச் சட்டங்களுக்குத் தனி மசோதாவும் தாக்கல் […]

உலகம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் மாயமான விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!

  • January 18, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் 11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் இன்று கண்டறியப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் (Sulawesi) உள்ள புலுசருன் (Bulusaraung) மலைப்பகுதியில் சிதைவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் மக்களைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமான ATR 42-500 விமானம் நேற்று காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

error: Content is protected !!