ஈராக் போர்- புற்றுநோய் அபாய இரசாயனத்திற்கு உட்படுத்தப்பட்ட UK வீரர்கள்
2003 ஆம் ஆண்டு ஈராக் போரின் போது, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அபாயங்களுக்கு பிரித்தானிய விமானப்படை வீரர்கள் உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆண்டு, ஈராகிலுள்ள கர்மத் அலி (Qarmat Ali) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பதற்காக, சுமார் 100 விமானப்படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடம், புற்றுநோயுடன் தொடர்புடைய மிக ஆபத்தான இரசாயனமான சோடியம் டைக்ரோமேட் மூலம் மாசடைந்திருந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. இந்த இரசாயனத்துக்கு நீண்ட காலம் உட்படுவது உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை, […]













