பொழுதுபோக்கு

என் நேர்மை மக்களுக்கு புரியும்: ரஹ்மான் விளக்கம்!

  • January 19, 2026
  • 0 Comments

“ சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் காயப்படுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை.” – என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். தனது பேட்டி சர்ச்சையானது விவகாரம் தொடர்பிலேயே ரஹ்மான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ பாலிவுட் சினிமா துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரம் […]

ஐரோப்பா

ட்ரம்புக்கு பதிலடி : அமெரிக்கா மீது வரி விதிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!

  • January 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், நேற்று ஐரோப்பிய நாடுகளின் பிரிதிநிதிகள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இதன்போது அமெரிக்கா மீது €93 பில்லியன் வரிகளை விதிக்கவும், அமெரிக்க நிறுவனங்களை அதன் சந்தையில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்றும், குறித்த வரியானது […]

உலகம்

காசா அமைதி வாரிய திட்டத்தை வைத்து நிதி வசூலிக்கும் ட்ரம்ப்!!

  • January 19, 2026
  • 0 Comments

காசா அமைதி வாரியத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்க விரும்பும் நாடுகள் முதல் வருடத்திற்குள் 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வரைவு ஆவணம் ஒன்றில், டொனால்ட் ட்ரம்ப் வாரியத்தின் தலைவராக பணியாற்றுவார், நிதியைக் கட்டுப்படுத்துவார், அனைத்து முடிவுகளையும் அங்கீகரிப்பார் மற்றும் அவரது வாரிசை நியமிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், நம்பகமான மற்றும் சட்டபூர்வமான நிர்வாகத்தை மீட்டெடுப்பது மற்றும் மோதலால் […]

விளையாட்டு

இந்திய மண்ணில் நியூசிலாந்து சாதனை: Virat Kohliலியும் அசத்தல்!

  • January 19, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தனி ஆளாகப் போராடிய விராட் கோஹ்லி Virat Kohli சதமடித்து அசத்தி, சாதனை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3வது துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கி அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். (12,665 ஓட்டங்கள்) கோஹ்லிக்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் – 12, 662 ஓட்டங்கள் (330 இன்னிங்ஸ்) , இலங்கை அணியின் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – 21 பேர் பலி!

  • January 19, 2026
  • 0 Comments

தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மாட்ரிட்டிலிருந்து தெற்கே சுமார் 360 கிமீ (223 மைல்) தொலைவில்  கோர்டோபா (Cordoba ) மாகாணத்தில் உள்ள அடமுஸ்  (Adamuz) அருகே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முதலாவதாக பயணித்த ரயில் தடம் புரண்டு தண்டவாளத்தில் விழுந்த நிலையில், இரண்டாவதாக வந்த ரயில் அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்த 18 பேர் ஏற்கனவே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சிலர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் […]

இந்தியா தமிழ்நாடு

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உச்ச கட்ட பாதுகாப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு India’s Republic Day சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதையொட்டி, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. 30 ஆம் திகதிவரை பாதுகாப்பு ஏற்பாடு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24, 25, 26 ஆகிய 3 நாட்களும் […]

இலங்கை செய்தி

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சுவிஸ் பயணம்!

  • January 19, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு World Economic Forum (WEF) இன்று (19) ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இலங்கை நேரப்படி இன்று அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கி பயணமானார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ Anil Jayantha Fernando மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமருடன் பயணித்துள்ளனர். 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவின் யாழ். உரைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் S.M. Marikar மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார். இது […]

செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

  • January 18, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில்(Indore) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல்(Daryl Mitchell) 137 ஓட்டங்களும் கிளென் […]

ஐரோப்பா செய்தி

செர்பியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம்

  • January 18, 2026
  • 0 Comments

வலதுசாரி தேசியவாத ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின்(Aleksandar Vucic) ஆட்சிக் கால ஊழலுக்கு எதிராக செர்பிய(Serbia) நகரமான நோவி சாட்டில்(Novi Sad) ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டுள்ளனர். திருடர்கள் என்று கோஷமிட்ட மாணவ போராட்டக்காரர்கள், அரசாங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், செர்பியாவில் ஊழலை ஒழித்து சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது எப்படி என்பது குறித்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த எதிர்ப்பு பேரணி ஜனவரி 27ம் திகதி செர்பிய தலைநகர் பெல்கிரேடில்(Belgrade) திட்டமிடப்பட்டுள்ளது என்று […]

error: Content is protected !!