உலகம்

பாகிஸ்தான் வணிக வளாக தீவிபத்து – பலி எண்ணிக்கை உயர்வு!

  • January 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் கராச்சியில் வணிக வளாகம் பற்றி எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 60 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 1,200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தில் காற்றோட்டம் இல்லாததால் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். தொடர்புடைய செய்தி  12 மணிநேர போராட்டம் : 06 பேர் மரணம் – பாகிஸ்தானில் பற்றி எரியும் வணிக வளாகம்!  

விளையாட்டு

T-20 உலகக்கிண்ணம்: ஸ்டீவ் ஸ்மித்துக்கு கதவடைப்பு?

  • January 19, 2026
  • 0 Comments

T-20 உலக்கிண்ண தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு Steve Smith இடமளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T- 20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா 3 T – 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றது. அத்தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதுவே உத்தேச உலகக்கிண்ண அணியாகவும் கருதப்படுகின்றது. இந்நிலையில் 15 பேரடங்கிய அணி […]

இலங்கை செய்தி

பாக் நீரிணையை ‘அறிவுசார் நீரிணையாக’ மாற்றுவோம் ; யாழில் ஆளுநர் அழைப்பு

  • January 19, 2026
  • 0 Comments

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மேற்குலக நாடுகளை விட நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) வழிகாட்டல் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், இந்தியாவின் 1,300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். […]

உலகம்

சீனாவில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்து – 08 பேர் மாயம்!

  • January 19, 2026
  • 0 Comments

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன். 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எட்டு பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மங்கோலியாவின் (Mongolia) உள் பகுதியில் அமைந்துள்ள யுனைடெட் ஸ்டீல் (United Steel) ஆலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெடிப்பிற்கான காரணம் தொடர்பில் அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

பராசக்தி பார்த்துவிட்டு பரவசமடைந்த சீமான்!

  • January 19, 2026
  • 0 Comments

“தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது.” – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் Naam Tamilar Katchi சீமான் Seeman தெரிவித்தார். சிவகார்த்திகேயன் Sivakarthikeyan, ரவிமோகன் Ravimohan, அதர்வா Atharvaa , ஸ்ரீ லீலா Sri Leela நடிப்பில் கடந்த 10 ஆம் திகதி பராசக்தி Parasakthi படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் வேட்டை நடத்திவருகின்றது. இந்நிலையில், பராசக்தி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி […]

இலங்கை செய்தி

விரைவில் பீஜிங் பறக்கிறார் வெளிவிவகார அமைச்சர்?

  • January 19, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath , விரைவில் சீனாவுக்கு China பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi யின் குறுகிய நேர பயணமாக கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்து சென்றார். இதன்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை, அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கடிதம் ஒன்றை, […]

உலகம்

சீனா மற்றும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படும் கனடா – கவலையில் ட்ரம்ப்!

  • January 19, 2026
  • 0 Comments

ஆர்க்டிக்கில் சீன மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்புகளால் கனடா பாதிக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த கூற்று ‘டோன்ரோ கோட்பாட்டுடன்’ (Donroe Doctrine) ஒத்துப்போவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்கு அரைக்கோளம் முழுவதும் அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ட்ரம்பின் பரந்த முயற்சிகளை மீளவும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. முன்னதாக ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாநிலமாக மாற அழைப்பு விடுத்திருந்தார்.  ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி கனடாவின் பிரதமர் மார்க் கார்னியுடன்   (Mark […]

அரசியல் இலங்கை செய்தி

கடுமையான முடிவுகளை எடுப்பேன்: சாமர எம்.பி. எச்சரிக்கை!

  • January 19, 2026
  • 0 Comments

“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை SLFP மீள கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.” இவ்வாறு அக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க Chamara Sampath Dassanayake தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய அமைப்பாளர் பதவியென்பது சவாலான விடயமாகும். இப்பதவியை வகித்துக்கொண்டு முன்னோக்கி செல்கையில் கட்சிக்காக […]

உலகம்

சிலியில் அவசரநிலை பிறப்பிப்பு : 20,000 பேர் வெளியேற்றம்!

  • January 19, 2026
  • 0 Comments

சிலியின் தெற்கில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் (Gabriel Boric) பேரழிவு நிலையை அறிவித்துள்ளார். குறித்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிலியின் CONAF வனத்துறை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் 24 செயலில் உள்ள தீயை எதிர்த்துப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 250 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பலத்த காற்று […]

ஆஸ்திரேலியா

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

  • January 19, 2026
  • 0 Comments

சிட்னி, போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று (19) அஞ்சலி செலுத்தப்பட்டது. யூத சமூகத்தை இலக்கு வைத்து டிசம்பர் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர்வரை காயமடைந்தனர். அடுத்த மாதம் 6 ஆம் திகதியே புத்தாண்டில் நாடாளுமன்றம் கூடவிருந்தது. எனினும், போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்ட மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுமாறு எதிரணிகள் வலியுறுத்தின. இதற்கமையவே […]

error: Content is protected !!