புகைப்பட தொகுப்பு

எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார்

  • January 20, 2026
  • 0 Comments

திரையுலகில் மிகவும் பிரபலமான தம்பதியர்களாக இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர்கள் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்துள்ளனர். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார். இதனால் எங்கள் […]

செய்தி பொழுதுபோக்கு

ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

  • January 20, 2026
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன் நடித்துள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படத்தை ஜனவரி 9-ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சபை இறுதி நேரத்தில் சான்றிதழ் வழங்க மறுத்ததால் இந்தச் சட்டச் சிக்கல் உருவானது. தணிக்கை சபையின் ஆய்வுக்குழு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மர்மமான […]

ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்து – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்கள்!! மீட்கமுடியாமல் தவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் காணாமல்போனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பெட்டிகளை அணுக கிரேன்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் குறைந்தது மூன்று உடல்கள் இன்னும் சிக்கியிருப்பதாக உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா (Fernando Grande-Marlaska) குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி  ஸ்பெயின் ரயில் விபத்து – அதிகரிக்கும் மரணங்கள்!

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் பயணத்தைத் தவிர்க்குமாறு பெய்ஜிங் எச்சரிக்கை

  • January 20, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷார்-இ-நவ் (Shahr-e-Naw) பகுதியில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற  இத்தாக்குதலில் 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சீனாவில் உய்குர் (Uyghur) முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்த சீன நாட்டவர் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் […]

உலகம் செய்தி

சுவிட்சர்லாந்தில் வெடிக்கப்போகும் கிரீன்லாந்து சர்ச்சை- ஐரோப்பாவுக்கு ட்ரம்ப் அழுத்தம்

  • January 20, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos) இந்த வாரம் நடைபெறும் மன்றத்தில் ஐரோப்பிய தலைவர்களிடம் கிரீன்லாந்து எமக்குக் கட்டாயம் என்று கூறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(Ursula von der Leyen ), ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை தவறு என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஐரோப்பாவின் பதில் அசைவற்றதாகவும், ஒன்றுபட்டதாகவும், இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமூக ஊடகங்களில் […]

உலகம்

சீனாவின் ஷாங்காய் நகரில் வரலாறு காணாத பனிப்பொழிவு – சில சாலைகள் மூடல்!

  • January 20, 2026
  • 0 Comments

சீனாவின் ஷாங்காய் நகரில் வரலாறு காணாத பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மிகவும் குளிரான வானிலை நிலவி வருவதால், நகரின் சில சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் சுமார் 12 மாகாணங்களில் கடுமையான குளிர் நிலவுவதாகவும், இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனவரி 2018 க்குப் பிறகு ஷாங்காய் நகரில் இதுபோன்ற பனிப்பொழிவு ஏற்படுவது இதுவே முதல் முறை.

இலங்கை செய்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நலன்புரித்திட்ட ஆறுதல் போதாது – ரவிகரன் ஆதங்கம்

  • January 20, 2026
  • 0 Comments

அரசாங்கம் மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெசும என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாமன்றில் இன்று (20) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு (அஸ்வெசும) தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் சீனாவின் ‘மெகா தூதரகம்’: பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில் பிரித்தானியா அனுமதி

  • January 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு குறித்த பல்வேறு கவலைகளுக்கு மத்தியிலும், லண்டனில் புதிய சீனத் தூதரக வளாகத்தை அமைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 255 மில்லியன் பவுண்டுகள் செலவில் 22,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ‘மெகா தூதரகம்’, ஐரோப்பாவிலேயே சீனாவின் மிகப்பெரிய தூதரக வளாகமாகத் அமையவுள்ளது. லண்டன் டவர் பிரிட்ஜ் அருகே அமைந்துள்ள ‘ரோயல் மின்ட் கோர்ட்’ (Royal Mint Court) பகுதியில் […]

அரசியல் இலங்கை செய்தி

“எங்களுக்கு புக்க வேண்டாம்: அந்த செம்மறிக்கு கதைக்க தெரியவில்லை” – சபையில் அர்ச்சுனா!

  • January 20, 2026
  • 0 Comments

அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களையே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி. அரசாங்கம் வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “உணவு, உடை, உறையுள் என்பனவே அடிப்படை தேவைகள் என்பது தரம் ஒன்று மாணவருக்குகூட தெரியும். ஆனால் உணவு, உறையுள், வீடு என ஜனாதிபதியின் மேடையில் இருந்துகொண்டு செம்மறியொன்று கூறுகின்றது. இப்படியான செம்மறிகளையே யாழ்.மாவட்ட எம்.பிக்களாக என்.பி.பி. அரசாங்கம் […]

உலகம்

ஈரான் விவகாரம் : அவசரமாக கூடும் ஐ.நா மனித உரிமை கவுன்சில்!

  • January 20, 2026
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வரும் நாட்களில் ஈரான் குறித்து அவசர அமர்வை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களை  ஒடுக்க முன்னெடுக்கப்பட்டு வரும் ஆபத்தான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக ஈரானில் வெடித்துள்ள போராட்டங்களால் இதுவரை 5000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk) இது தொடர்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். […]

error: Content is protected !!