லண்டனில் சீனாவின் ‘மெகா தூதரகம்’: பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில் பிரித்தானியா அனுமதி
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு குறித்த பல்வேறு கவலைகளுக்கு மத்தியிலும், லண்டனில் புதிய சீனத் தூதரக வளாகத்தை அமைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 255 மில்லியன் பவுண்டுகள் செலவில் 22,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ‘மெகா தூதரகம்’, ஐரோப்பாவிலேயே சீனாவின் மிகப்பெரிய தூதரக வளாகமாகத் அமையவுள்ளது. லண்டன் டவர் பிரிட்ஜ் அருகே அமைந்துள்ள ‘ரோயல் மின்ட் கோர்ட்’ (Royal Mint Court) பகுதியில் […]













