பிளவுப்படும் நேட்டோ கூட்டணி : துருப்புகளை குறைக்கும் ட்ரம்ப்!
நேட்டோ கட்டளை மையங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. வொஷிங்டனின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் கணிசமாக அதிகரிப்பதாகவும், நேட்டோ கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புதிய தகவலின்படி, நேட்டோவின் இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் உயரதிகாரிகளில் 200 பேர் வரை நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நேட்டோ புலனாய்வு இணைவு மையம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேச நாட்டு சிறப்பு […]













