இலங்கை செய்தி

மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!

  • January 22, 2026
  • 0 Comments

ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். “ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான […]

இலங்கை செய்தி

இன்று இலங்கை வருகிறது IMF குழு!

  • January 22, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் IMF பிரதநிதிகள் குழு இன்று (22) இலங்கை வரவுள்ளது. டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர் என தெரியவருகின்றது. பேரிடரால் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் உதவி பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இக்குழு இலங்கையில் தங்கி இருக்கும்.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை மீளப் பெற்றார் ட்ரம்ப்!

  • January 22, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து விவகாரத்தில் 08 ஐரோப்பிய நாடுகள் மீது பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதனை மீளப் பெற்றுள்ளார். இருப்பினும் கிரீன்லாந்தை கையப்படுத்தும் முடிவை மீளவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் நிராகரித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos)  நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் (Mark Rutte) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரியவருகிறது. இது தொடர்பில் ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் ட்ரம்ப் […]

உலகம்

அமெரிக்காவை விட்டு வெளியேற விரும்பும் சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு ஊக்கத்தொகை!

  • January 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள் காரணமாக தாமாக நாட்டை விட்டு வெளியேற விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு ஊக்கத்தொகை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய  அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) செயலி மூலம் சுயமாக நாட்டை விட்டு வெளியேற விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு  $2,600 டொலர்  உதவித்தொகை வழங்கப்படும் என  உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS)  அறிவித்துள்ளது. இந்த செயற்திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியை எதிரணியால் கவிழ்க்க முடியாது: அமைச்சர் திட்டவட்டம்!

  • January 22, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன samantha vidyaratna தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது […]

விளையாட்டு

வெற்றிநடை போடுமா இலங்கை? இன்று மோதல்!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் ODI போட்டி இன்று (22) நடைபெறுகின்றது. கொழும்பு ஆர். பிரேமதாச RSP மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் பலப்பரீட்சை இன்று நடைபெறுகின்றது. ரி -20 உலகக்கிண்ணம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியானது இலங்கை ஆடுகளம் தொடர்பான அனுபவத்தை இங்கிலாந்துக்கு வழங்கும் என […]

இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள புதிய பொறிமுறை அவசியம்!

  • January 22, 2026
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள்வதற்கு புதிய வியூகத்துடன்கூடிய பொறிமுறையொன்று அவசியம் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஏதேனும் ஒரு அமைச்சின்கீழ் கொண்டுசென்று சொறுவுவதைவிட, அனர்த்த முகாமைத்துவத்துக்கென தனி அமைச்சை அமைப்போம். புதிய வியூகம் மற்றும் பொறிமுறையை உருவாக்குவோம். பேரிடரின்போது எதிரணி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியது. இதனை நாம் நிராகரிக்கின்றோம். தூதரக மற்றும் இராஜதந்திர […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று முதலாவது டி20 போட்டி நாக்பூரில்(Nagpur) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில், அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 84 ஓட்டங்களும் ரிங்கு சிங்(Rinku […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

  • January 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின்(Pakistan) கராச்சியில்(Karachi) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் ஒரு கடையில் இருந்து மட்டும் 30 உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டதாக கராச்சி தெற்கு துணை காவல்துறை அதிகாரி ஜெனரல் அசாத் ராசா(Asad Raza) குறிப்பிட்டுள்ளார். மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் போது […]

இலங்கை செய்தி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹபராதுவ பிரதேச சபை தலைவர் பதவி விலகல்

  • January 21, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின்(NPP) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹபராதுவ(Habaraduwa) பிரதேச சபையின் தலைவர் ஹர்ஷ மனோஜ் கார்டியா புஞ்சிஹேவா(Harsha Manoj Cardia Punchihewa) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஹபராதுவ பிரதேச சபையின் செயலாளர் இரேகா தில்ருக்ஷியிடம்(Rekha Dilrukshi) சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைவர் ஹர்ஷ மனோஜ் கார்டியா புஞ்சிஹேவா பதவி விலக முடிவு செய்தது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!