உலகம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெப்ப அலை – மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!

  • January 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இம்முறை சில பகுதிகளில் இந்த தினத்தை ஒட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்கள்  இரத்து செய்யப்பட்டுள்ளன. அடிலெய்டில், கடுமையான வெப்ப முன்னறிவிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தின அணிவகுப்பு மற்றும் ஒளி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மில்லியன் கணக்கான மக்களுக்கு வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளைய தினம் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்கு மாநிலங்களான விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 40 […]

விளையாட்டு

இந்திய அணி சாதனை!

  • January 26, 2026
  • 0 Comments

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, முக்கிய சில சாதனைகளையும் படைத்துள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்பில் முதல் மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இதற்கமைய இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது. […]

உலகம்

காங்கோவில் உயிருடன் எரியூட்டப்பட்டு 15 பேர் படுகொலை! அத்துமீறும் போராளிக்குழு!

  • January 26, 2026
  • 0 Comments

காங்கோவில் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய போராளிக்குழுவொன்று நேற்று அதிகாலை முன்னெடுத்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக இடூரி (Ituri) மாகாணத்தை தளமாகக் கொண்ட  மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. நேச நாட்டு ஜனநாயகப் படை அல்லது ஏடிஎஃப் நடத்திய இந்த தாக்குதலில்  ஒரு வீட்டில் 15 பேர் உயிருடன் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 07 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வேல்ஸ் வோன்குட்டு (Walese Vonkutu) நிர்வாகப் பகுதியில் மேலும் மூன்று […]

உலகம்

மெக்சிகோவின் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி!

  • January 26, 2026
  • 0 Comments

மத்திய மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 12 பேர் காயமடைந்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர். கால்பந்து போட்டியின் நிறைவில் சம்பவ இடத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நகரத்தில் அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களை அடிகோடிட்டு […]

இலங்கை செய்தி

ஊழலை ஒழிப்பதில் அநுர அரசு உறுதி:வடக்கு ஆளுநர் திட்டவட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

“ஊழலை ஒழிப்பதில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான்” – எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி […]

இந்தியா

77 ஆவது குடியரசு தின விழா கோலாகலம்: ராணுவ அணிவகுப்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’!

  • January 26, 2026
  • 0 Comments

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் […]

உலகம்

அமெரிக்காவில் தீவிபத்தில் சிக்கிய தனியார் ஜெட் விமானம் : 08 பேரின் நிலை குறித்து கவலை!

  • January 26, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்  மைனே (Maine) விமான நிலையத்திலிருந்து எட்டு பேருடன் புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் தீப்பிடித்து எரிந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், பாங்கூர் சர்வதேச விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் டர்போ-ஃபேன் ஜெட் பாம்பார்டியர் சேலஞ்சர் 600 ( twin-engine turbo-fan jet Bombardier Challenger 600) என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான […]

இந்தியா

EUவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிகளை குறைக்கும் இந்தியா!

  • January 26, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரிகளை 110% முதல் 40% வரை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 27 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிலிருந்து 15,000 யூரோக்களுக்கு மேல் ($17,739) இறக்குமதி விலை கொண்ட வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கான வரியை உடனடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காலப்போக்கில் 10% ஆகக் குறைக்கப்படும் என்றும், வோக்ஸ்வாகன், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMW போன்ற ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்திய சந்தைக்கான அணுகலை எளிதாக்கும் என்றும் […]

விளையாட்டு

வெற்றி மகுடம் யாருக்கு? நாளை பலப்பரீட்சை!

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ODI போட்டி நாளை (27) நடைபெறுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில்,   இறுதி ஆட்டதில் வெல்லும் அணியே தொடரில் வெற்றிவாகை சூடும். கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.  

அரசியல் இலங்கை

தமிழரசுக் கட்சிக்கள் உள்ளக மோதல்: ஸ்ரீதரனை குறிவைக்கும் சுமந்திரன்!

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ITAK சுமந்திரன் Sumanthiran மற்றும் சிறிதரன் S iridharan ஆகியோருக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. இருவரும் வெளிப்படையாக மோதிக்கொள்ளாவிட்டாலும் கட்சிக்குள் வெட்டு குத்து படலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். “ நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி, சிறிதரனுக்கு தமிழ் அரசுக் […]

error: Content is protected !!