புகைப்பட தொகுப்பு

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – இணையத்தில் ஹிட்

  • January 26, 2026
  • 0 Comments

பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, இன்ஸ்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பற்றி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது, எடுத்த  புகைப்படங்களை பகிர்ந்து  இரசிகர்களை ஈர்த்திருக்கிறார் பிரியங்கா.

ஐரோப்பா

கிரேக்கத்தில் பற்றி எரிந்த தொழிற்சாலை – 04 பெண்கள் உயிரிழப்பு!

  • January 26, 2026
  • 0 Comments

கிரேக்கத்தில் பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 04 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் 13 பேர் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்டவுடன் 08 பேர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியதாகவும், நால்வர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அத்துடன் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தீ விபத்திற்கான காரணம் […]

இலங்கை செய்தி

அரச வைத்தியசாலையில் டெஸ்ட் ட்யூப் பேபி சிகிச்சை – வரலாற்று முன்னேற்றம்

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கையில் முதல் முறையாக அரச வைத்தியசாலையில் ‘டெஸ்ட் ட்யூப் பேபி’ சிகிச்சை (IVF) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த புதிய வசதி முன்னெடுக்கப்படவுள்ளது இந்த சிகிச்சை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தந்தநாராயண தெரிவித்துள்ளார். இது அரச சுகாதார சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் அவர் கூறினார். தற்போது இலங்கையில் சில தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே டெஸ்ட் […]

செய்தி விளையாட்டு

டி20 உலக கோப்பை – வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

  • January 26, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ்(West Indies) அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்(Shai Hope) நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஷாய் ஹோப்(Shai Hope) ஜான்சன் சார்லஸ்(Johnson Charles) ராஸ்டன் சேஸ்(Roston Chase) […]

உலகம்

மினியாபொலிஸில் இருந்து குடியேற்ற முகவர்கள் வெளியேற்றப்படுவார்களா? ட்ரம்ப் பதில்!

  • January 26, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மினியாபொலிஸில் (Minneapolis)   போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து குடியேற்ற முகவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி கூட்டாட்சி அதிகாரிகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை வழங்கவில்லை, ஆனால் “ஒரு கட்டத்தில், நாங்கள் வெளியேறுவோம் என்று மட்டும் அறிவித்துள்ளார். சனிக்கிழமை 37 வயதான செவிலியரான அலெக்ஸ் பிரெட்டி கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் குடியேற்ற முகவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ட்ரம்ப் […]

ஐரோப்பா

ரஷ்ய எரிவாயு தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல்!

  • January 26, 2026
  • 0 Comments

ரஷ்ய எரிவாயு தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி  2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்ய எரிவாயு இறக்குமதியைத் தடை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தற்போது சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்தக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை ரஷ்ய எரிபொருளை பெரிதும் நம்பியுள்ள ஹங்கேரி (Hungary) இந்த விவகாரத்தை ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதாக அறிவித்துள்ளது. ஹங்கேரி (Hungary) […]

இலங்கை செய்தி

16–22 வயது இளைஞர்களின் குற்றங்கள் 200% அதிகரிப்பு – சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் அபாயம்

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த 10 வருடகால பகுதியில், 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளதாக சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவகம் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளமைய தெரியவந்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் […]

இலங்கை செய்தி

ஈஸ்டர் சம்பவம் – ஹேமசிறி மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான வழக்கில் முக்கிய திருப்பம்

  • January 26, 2026
  • 0 Comments

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை மார்ச் மாதம் 23 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் […]

இலங்கை செய்தி

நாட்டைவிட்டு வெளியேற முடியாது – எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக பெறப்பட்ட அதிரடி உத்தரவுகள்

  • January 26, 2026
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின், உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தாலும் கொழும்பு உயர்நீதிமன்றத்தாலும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் தீர்ப்புகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலனை செய்வதற்காக அந்த மனுக்கள் இன்று மீண்டும் அழைக்கப்பட்டன. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கைவிடுமாறு வலியுறுத்து!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயாத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்ணி Democratic Tamil National Alliance வலியுறுத்தியுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh K. Premachandran இது தொடர்பான வலியுறுத்தலை இன்று (26) விடுத்துள்ளார். இது தொடர்பில் அவரால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , ” கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்துக்கான […]

error: Content is protected !!