மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் திறப்பு
மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஏனைய மாகாணங்களில் இருந்து வடக்கு மாகாணத்திற்குச் சேவைக்கு வரும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலமே, மக்களுக்கான முழுமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட […]













