ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை தொடர்பான சட்டமூலம் பிரான்ஸில் நிறைவேற்றம்!

  • January 27, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை  பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அங்கீகரித்துள்ளனர். 130-21 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமூலம் வரும் செப்டம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது. சட்டத்திற்கு அமைய உயர்நிலைப் பாடசாலைகளிலும் தொலைபேசி பாவனை  தடை செய்யப்படும். மேலும் அல்காரிதம்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அறிவியல் பரிந்துரைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதை வலுவாக ஆதரித்துள்ளார். தொடர்புடைய செய்தி பிரான்ஸில் குழந்தைகளுக்கான சமூக ஊடகத் […]

இலங்கை செய்தி

யாழில். பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டு – சீல் வைக்கமாறு உத்தரவு

  • January 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் உரிமையாளர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் , கடை உரிமையாளரும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடை உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் […]

இலங்கை செய்தி

இலங்கை–நெதர்லாந்து உறவை வலுப்படுத்த திட்டம்!

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Aruna Jayasekara சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (26) மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பேரிடரின்போதும், அதற்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து நெதர்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி […]

உலகம் செய்தி

அமெரிக்க தாக்குதல் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் – ஈரான் எச்சரிக்கை

  • January 27, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான பெரிய போர்க்கப்பல் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேர்காணாலொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை ஈரானின் தலைமை, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இணைய முடக்கங்களால் ஏற்பட்ட கடுமையான போராட்டங்களில் அதிகளவான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளமை காரணமாக, அமெரிக்க தாக்குதல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஈரானிய அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். மத்திய கிழக்கில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் வருகை, […]

இலங்கை செய்தி

டிட்வா பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது – ஆளுநர் வேதநாயகன்

  • January 27, 2026
  • 0 Comments

டிட்வா புயல் இடர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அந்த பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு […]

இலங்கை செய்தி

பேரிடரால் சேதமடைந்த மதத் தலங்களை மீள கட்யெழுப்பும் திட்டம் ஆரம்பம்!

  • January 27, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) ஆரம்பமானது. கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, […]

உலகம்

ஈரான் அரச எதிர்ப்பு போராட்டம் – 6000இற்கும் மேற்பட்டோர் மரணம்!

  • January 27, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை அமைப்புகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய  போராட்டங்களில் 6,126 பேர் இறந்துள்ளதாகவும்,  11,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கும் மேலாக நீடித்த போராட்டங்கள் தொடர்பாக ஈரானிய பாதுகாப்புப் படையினரால் 41,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அறிவியல் & தொழில்நுட்பம்

Just Eat UK செயலியில் புதிய AI குரல் உதவியாளர் அறிமுகம்

  • January 27, 2026
  • 0 Comments

உணவு விநியோக நிறுவனமாக Just Eat வாடிக்கையாளர்களுக்கான புதிய AI குரல் உதவியாளரை UK செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய AI குரல் உதவியாளர், வாடிக்கையாளர்கள் எந்த உணவை உண்பது என்று முடிவெடுக்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குரல் மூலம் ஆர்டரைப் பற்றி உரையாடி, தனிப்பட்ட பரிந்துரைகளை பெறலாம். குறித்த AI குரல் உதவியாளர், முன் ஆர்டர்கள் மற்றும் உணவு விருப்பங்களை பயன்படுத்தி சரியான பரிந்துரைகளை வழங்குகிறது. இது பல மொழிகளில் பேசக்கூடியது என்பதுடன் பார்வைக் குறைபாடுகள் உள்ள […]

ஐரோப்பா

நேட்டோவை தாக்கும் ரஷ்யா – ஜெர்மனி எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

போர் சூழ்நிலைக்கு ஜேர்மன் துருப்புக்கள் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மன் ஆயுதப்படை ஆதரவு கட்டளைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெரால்ட் ஃபங்கே (Lieutenant General Gerald Funke) அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நேட்டோமீது  ரஷ்யா பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஜெர்மனியின் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் முழு அளவிலான போர் சூழலுக்கு தயாராகி வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். நாசவேலை மற்றும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளிட்ட கலப்பின அச்சுறுத்தல்கள் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் – போராட்டக்காரர்கள், பொலிஸார் இடையே தர்க்கம்

  • January 27, 2026
  • 0 Comments

சேவை நிரந்தரம் கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தர்க்க நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தின் போது இன்று (27) அவர்கள் நீதியின் மரணம் எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்தனர். இந்நிலையில் அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர். அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. […]

error: Content is protected !!