இந்தியா

ஸ்தீரமான நிலையில் இந்திய பொருளாதாரம்!

  • January 29, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman, மக்களவையில் Lok Sabha இன்று (29) முன்வைத்தார். அந்த அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரில் பாதீடு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி அமைச்சு சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கப்படுவது […]

உலகம்

நிரந்தரமாக பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான்!

  • January 29, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரின் கட்சியினர் கவலை வெளியிட்டுள்ளனர். சிகிச்சை அளிக்கப்படாத கண் நோய் அவரது கண்பார்வைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று அவரின் ஆதரவளார்கள் குறிப்பிட்டுள்ளனர். 73 வயதான இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பான பல தண்டனைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI), அவர் நீண்ட காலமாக தனிமைச் சிறையில் […]

இந்தியா தமிழ்நாடு

அ.தி.மு.கவுடன் சங்கமம்: டி.டி.வி. தினகரனை தூதனுப்புகிறார் ஓ.பி.எஸ்.!

  • January 29, 2026
  • 0 Comments

அ.தி.மு.கவுடன் இணைந்து செயல்பட தயாராகவே இருக்கின்றேன். இதற்குரிய நடவடிக்கையை டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் OPS தெரிவித்தார். தமிழக சட்ட மன்ற தேர்தர் தொடர்பில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகின்றார். அவரது ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சிகளின் இணைந்துவருகின்றனர். இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகின்றார். இந்நிலையில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின்போது, “ சட்டமன்ற […]

உலகம்

வட்டி விகித குறைப்பு – அமெரிக்க பெடரல் வங்கியின் தீர்மானம்!

  • January 29, 2026
  • 0 Comments

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை 3.50% – 3.75% இல் பராமரிக்க நேற்று  முடிவு செய்துள்ளது. ஆளுநர்கள் கிறிஸ்டோபர் வாலர் (Christopher Waller) மற்றும் ஸ்டீபன் மிரான் (Stephen Miran) ஆகியோர் கால் சதவீத புள்ளி விகிதக் குறைப்பை ஆதரித்துள்ளனர். அத்துடன் எதிர்காலத்தில் கடன் வாங்கும் செலவு குறைப்பு எப்போது நிகழலாம் என்பதற்கான எந்த அறிகுறியையும் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இதேவேளை டிசம்பரில் வேலையின்மை விகிதம் 4.4% ஆக இருந்த நிலையில், […]

உலகம் ஐரோப்பா

வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு: அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கையா?

  • January 29, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி Xi Jinping மற்றும் பிரிட்டன் பிரதமர் Keir Starmer ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால், நட்பு நாடுகள்கூட கடும் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றன. ஏற்றுமதி பொருளாதாரதில் அமெரிக்காவை மற்றும் சார்ந்திருக்காது, ஏனைய பலம் பொருந்திய நாடுகளில் தமக்குரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பொருளாதாரம்மீது தமது பார்வையை செலுத்திய நிலையில், […]

உலகம்

ட்ரம்பின் தாக்குதல் அச்சுறுத்தல் – பதிலடி கொடுத்த ஈரான்!

  • January 29, 2026
  • 0 Comments

ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான காலம் தீர்த்துவிட்டதாகவும், எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு பதிலளித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது எனவும் ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், “பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது. ஆனால் தாக்குதலுக்கு உந்தப்பட்டால் தன்னைத் தற்காத்துக் […]

விளையாட்டு

சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு அடித்த அதிஷ்டம்!

  • January 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ODI ஆட்டத்தில் சதமடித்து அசத்திய பவன் ரத்நாயக்கவுக்கு Pawan Ratnayake இலங்கை அணியில் மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் நாளை (30) ஆரம்பமாகின்றது. கண்டி பல்லேகல மைதானத்தில் Pallekele Stadium இலங்கை நேரப்படி போட்டி இரவு 7 PM மணிக்கு ஆரம்பமாகின்றது. இதில் ஆடவுள்ள இலங்கை அணிக்குள் 23 வயதான பவன் ரத்நாயக்க உள்வாங்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான […]

உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5500 டொலராக பதிவு!

  • January 29, 2026
  • 0 Comments

வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து இருப்புக்களை குவித்து […]

இலங்கை செய்தி

தேசிய வைத்தியசாலையாகிறது யாழ். மருத்துவமனை!

  • January 29, 2026
  • 0 Comments

“ தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன், விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க Dr. Anil Jasinghe தெரிவித்தார். சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தலைமையில் கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தின்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தங்கம் வெல்ல அரிய வாய்ப்பு – நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் போட்டி!

  • January 29, 2026
  • 0 Comments

ராயல் மின்ட், “தி கிரேட் பிரிட்டிஷ் ட்ரெஷர் ஹன்ட்”  (The Great British Treasure Hunt) என்ற போட்டியை நாடு தழுவிய ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டி பங்கேற்பாளர்களுக்கு 250 கிராம் திட தங்கப் பட்டையை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது, தற்போது இதன் மதிப்பு £28,000 முதல் £29,000 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எண்கள், எழுத்துக்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும் ஒரு சிறப்பு £5 “பென்னி டிராப்ஸ்” (“penny drops)  நாணயமும் அடங்கும். இந்த […]

error: Content is protected !!