விளையாட்டு

தமிழ் வீரர் அசத்தல்: இலங்கை அணி வெற்றி!

  • January 30, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். அவரது பந்து வீச்சு பாணி தொடர்பான காணொளியும் வைரலாகி வருகின்றது. மேற்படி வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்!

  • January 30, 2026
  • 0 Comments

தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி United Socialist Party வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அக்கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது. கட்சி தலைவரான சிறிதுங்க ஜயசூரிய Siruthunga Jayasuriya சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் எனவும் […]

இலங்கை செய்தி

78 ஆவது சுதந்திர தினம்: வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை!

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தின 78th Independence Day விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை. ஜனாதிபதி தலைமையிலேயே நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி “ கட்டியெழுப்புவோம் இலங்கையை” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் […]

உலகம் செய்தி

எம்மி விருது வென்ற பாலஸ்தீன பத்திரிகையாளரின் டிக்டாக் கணக்கு முடக்கம்

  • January 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவில்(America) புதிய முதலீட்டாளர்கள் சமூக ஊடக தளத்தை கையகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பாலஸ்தீன(Palestinian) பத்திரிகையாளர் பிசான் ஓவ்டாவின்(Bisan Owda) டிக்டோக்(Tiktok) கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. எம்மி விருது(Emmy Awards) பெற்ற பத்திரிகையாளரும், காசாவை(Gaza) சேர்ந்த அல் ஜசீரா AJ+(Al Jazeera AJ+) பத்திரிகையாளருமான பிசான் ஓவ்டா, தனது இன்ஸ்டாகிராம்(Instagram) மற்றும் எக்ஸ்(X) கணக்குகளில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து தனது டிக்டோக் கணக்கு தடைசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். “டிக்டோக் எனது கணக்கை நீக்கியது. எனக்கு அங்கு 1.4 […]

செய்தி விளையாட்டு

முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து

  • January 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில்(England) இந்த வருடம் ஜூன் மாதம் 12ம் திகதி மகளிர் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நெதர்லாந்து(Netherland) அணி அமெரிக்காவை(USA) 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே நேபாளம்(Nepal) மற்றும் தாய்லாந்தை(Thailand) வீழ்த்தி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ளது […]

உலகம் செய்தி

14 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

  • January 29, 2026
  • 0 Comments

14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம்(Bangladesh) மற்றும் பாகிஸ்தானுக்கு(Pakistan) இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான அறிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில், டாக்காவிலிருந்து(Dhaka) கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ்(Biman Bangladesh Airlines) ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இடையில்லா விமானங்கள் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் […]

இலங்கை செய்தி

லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் உட்பட மூவர் கைது

  • January 29, 2026
  • 0 Comments

லங்கா சதோசாவின் முன்னாள் மூத்த மேலாளர் மற்றும் இரண்டு நபர்கள் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர். 2021ம் ஆண்டு வெள்ளைப்பூண்டு தொகுதியை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை, சதோச நிறுவனம் ஊடாக பொதுமக்களுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்யாமல், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

உலகம் செய்தி

திருமணத்திற்கு முன் உடலுறவு மற்றும் மது அருந்திய இந்தோனேசிய ஜோடிக்கு 140 பிரம்படி

  • January 29, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின்(Indonesia) ஆச்சே(Aceh) மாகாணத்தில், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காகவும் மது அருந்தியதற்காகவும் ஷரியா(sharia) காவல்துறையினர் ஒரு ஜோடிக்கு தலா 140 முறை பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில், ஒரு பொது பூங்காவில் பிரம்பு குச்சியால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையை அனுபவித்த பிறகு அந்தப் பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மொத்தத்தில், இந்த ஜோடிக்கு 140 பிரம்படிகள் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காக 100 மற்றும் மது அருந்தியதற்காக 40 என்று ஷரியா […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – உறவினர் கைது

  • January 29, 2026
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) பர்வானி(Parwani) மாவட்டத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கால்வாயில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது உறவினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜ்பூர்(Rajpur) காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, கால்வாயில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரி ஜெகதீஷ் தாவர்(Jagdish Thawar) குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் நீரில் மூழ்கி இறந்ததால் மரணம் ஏற்பட்டதாகவும் […]

உலகம் செய்தி

ஈரானின் புரட்சிகர காவல்படையை பயங்கரவாத குழுவாக பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

  • January 29, 2026
  • 0 Comments

போராட்டக்காரர்கள் மீதான கொடூரமான அடக்குமுறையின் போது 6,373 பேரைக் கொன்ற பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின்(Iran) இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை(IRGC) ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட உள்ளது என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ்(Kaja Kallas) குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஆதரவை வழங்கினால், ஈரானின் புரட்சிகர காவல்படையை அல்-கொய்தா(al-Qaeda), இஸ்லாமிய அரசு(IS), டேஷ்(Daesh) மற்றும் ஹமாஸ்(Hamas) போன்ற பயங்கரவாத குழுக்களுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “நீங்கள் […]

error: Content is protected !!