இந்தியா செய்தி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உத்தரபிரதேச நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை

  • January 30, 2026
  • 0 Comments

2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேச(Uttar Pradesh) நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அக்டோபர் 29, 2020 அன்று டபுவா(Dapua) காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ரவி பாண்டே(Ravi Pandey) என அடையாளம் காணப்பட்டதாகவும் தலைமை வழக்கறிஞர் ரவீந்தர் குப்தா தெரிவித்துள்ளார். சம்பவ தினத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றபோது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாண்டே, வேலைக்காக உதவி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பூமியை போலவே தோற்றமளிக்கும் மற்றுமொரு கோள் கண்டுப்பிடிப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

பூமியை போலவே இருக்கும் ஒரு வெளிப்புறக் கோளை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். HD 137010 b என்று அழைக்கப்படுகின்ற இந்த கோளானது செவ்வாய் கிரகத்தை விடக் குளிராக இருக்கலாம் என கருதப்படுகிறது. நாசாவின் ஓய்வுபெற்ற கெப்லர் (Kepler) விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி குறித்த கோள்  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது  146 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த அமைப்பானது பூமியின் வெப்பத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெறுவதாகவும் ஆய்வாளர்கள் […]

இலங்கை

துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!

  • January 30, 2026
  • 0 Comments

துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உரிமங்களை புதுப்பிக்கும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது. உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி, பிப்ரவரி 10, 2026 க்கு முன் அபராதம் செலுத்தி துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும். குறித்த காலக்கெடுவிற்குள் உரிமத்தைப் புதுப்பிக்காத எந்தவொரு துப்பாக்கி உரிமையாளருக்கும் […]

இந்தியா செய்தி

மாதவிடாய் ஆரோக்கியம் அடிப்படை உரிமை – அனைத்து மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை வழங்குமாறு உத்தரவு

  • January 30, 2026
  • 0 Comments

மாதவிடாய் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை பாடசாலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் 06 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் 2024 டிசம்பர் 10 அன்று, தாக்கல் செய்த […]

இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது!

  • January 30, 2026
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவை Constitutional Council நாளை (31) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் Auditor general தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறுகின்றது. கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த WPC விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இன்றுவரை புதிய கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவரின் பதவிகாலமும் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டிருந்த பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையிலேயே […]

விளையாட்டு

ஆட்டம் ஆரம்பம்: களத்தடுப்பை தேர்வு செய்தது இங்கிலாந்து! (Update)

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.40 மணிக்கு ஆரம்பமானது. மழை காரணமாக தாமதித்தே போட்டி ஆரம்பமானது. இதனால் 17 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.   ………… முதலாம் இணைப்பு இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி, மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் முதல் ஆட்டம், கண்டி -பல்லேகல […]

இலங்கை செய்தி

இஸ்ரேலில் விசேட தேவையுடைய மாணவி பாலியல் வன்புணர்வு – இலங்கை பிரஜையின் மோசமான செயல்

  • January 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் உள்ள விசேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு சென்றதாகக் கூறப்படும் குறித்த சந்தேக நபர்,  தனது உத்தியோகபூர்வ வேலைத் துறைக்கு அப்பால் தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்டர்போலின் (Interpol) இஸ்ரேலிய கி கிளையிடமிருந்து தூதரகத்திற்கு கிடைத்த தகவலின்படி, அவர் பெயிட் ஷமேஷ் […]

உலகம்

ஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து அச்சம்!

  • January 30, 2026
  • 0 Comments

ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து அவர்களின் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஈரானில் தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் அவர்கள் மீளவும் வீடு வந்து சேர்வார்களா என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8 ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து  ஈரானிய அதிகாரிகள் எம்டி வேலியண்ட் ரோர் (MT Valiant Roar) என்ற எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றினர். துபாயை தளமாகக் கொண்ட பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சியால் […]

இலங்கை செய்தி

வவுனியாவிலிருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்து சேவை ஆரம்பம்

  • January 30, 2026
  • 0 Comments

வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசு பேருந்து சேவை இலங்கை போக்குவரத்துச்சபையால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும். வவுனியா வீதிக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் வீதிக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சேவையானது முதற்கட்டமாக ஒருவழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை […]

இலங்கை செய்தி

சுற்றுலா விசாக்களை விரைவாக செயற்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • January 30, 2026
  • 0 Comments

வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்களை விரைவாகச் செயற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக […]

error: Content is protected !!