அரசியல் இலங்கை செய்தி

“மோசடிகளை திசை திருப்பவே ராஜபக்ச குடும்பம் இலக்கு வைப்பு”

  • January 31, 2026
  • 0 Comments

“ எனது குடும்பத்தை இலக்கு வைத்து தனது ஆட்சியில் அரங்கேறும் மோசடிகளை திசை திருப்பலாம் என NPP அரசாங்கம் கருதுமானால் அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (31) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எழுச்சி பெற்றது. அடுத்த தேர்தல்களிலும் நிச்சயம் […]

ஐரோப்பா செய்தி

கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போன சிறுமியைத் தேடும் முயற்சிகள் புயல் காரணமாக தடை

  • January 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஏழு வயது சிறுமியைத் தேடும் முயற்சிகள், புயல் காரணமாக தடைபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். லங்காஷயர் (Lancashire) பிளாக்பர்னைச் (Blackburn) சேர்ந்த இனாயா மக்தா (Inaya Makhta), புதன்கிழமை மொராக்கோவின் (Morocco) காசாபிளாங்கா (Casablanca) கடற்கரையில் உள்ள பாறைகளில் அமர்ந்திருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இனாயா மக்தாவின் குடும்பத்திற்கு உடனடி ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிளாக்பர்ன் நாடாளுமன்ற உறுப்பினர் அட்னான் ஹுசைன் (Adnan Hussain, […]

உலகம்

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவை தாக்கிய இஸ்ரேல் – 12 பேர் பலி!

  • January 31, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று  நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு காசாவில் உள்ள இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மற்றும் கான் யூனிஸில் உள்ள ஒரு கூடாரம் ஆகியவை சேதமடைந்துள்ளன. காசா நகரில் நடந்த தாக்குதலில் ஒரு தாய், 03 குழந்தைகள் மற்றும் ஒரு உறவினர் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கூடாரத்தில் முன்னெடுக்கப்பட்ட  தாக்குதலில் […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 03 ஆம் திகதி இறுதி முடிவு!

  • January 31, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகம் Auditor General தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை Constituent Assembly கூடவுள்ளது எனவும் அவர் கூறினார். புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, […]

இலங்கை செய்தி

Port city யில் தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி – நாளையுடன் நிறைவு

  • January 31, 2026
  • 0 Comments

தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி கொழும்பு துறைமுக நகரில் நேற்று ஆரம்பமானது. நாளைய தினத்துடன் கண்காட்சி நிறைவடையவுள்ளது. போர்ட் சிட்டி விற்பனை வளாகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமுத்திர கைத்தொழில் சபை ஏற்பாடு செய்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி பிரதியமைச்சர்களான ச்சதுரங்க அபேசிங்க, ருவண் ரணசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனூடாக தேசிய பொருளாதாரத்திற்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதுடன் துறைசார்ந்த புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் புயல் – போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

  • January 31, 2026
  • 0 Comments

புயல் காரணமாக இங்கிலாந்தில் டெவோன் (Devon) மற்றும் கார்ன்வால் (Cornwall) பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள், வீதிகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டெவோனில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும், கார்ன்வாலில் இரண்டு வெள்ள அபொய எச்சரிக்கைகளும் தற்போது அமலில் உள்ளன. வெள்ளம் காரணமாக, எக்ஸிடெர் செயின்ட் டேவிட் (Exeter St Davids) – பார்ன்ஸ்டேபிள் (Barnstaple) இடையேயான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், எக்ஸிடெர் செயின்ட் டேவிட் – ஓகேஹாம்ப்டன் […]

இலங்கை செய்தி

விலைபோகாத தலைவரே மாவை: திருவுருவச் சிலையை திறந்து வைத்து ஆளுநர் உரை!  

  • January 31, 2026
  • 0 Comments

“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா Mavai.C.Senathirasa பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர்.” இவ்வாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் N.Vedhanayagan புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் எனவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அவரது உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி திருவுருவச் சிலை வடக்கு மாகாண […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினரின் அட்டகாசம் – 25 தொழிலாளர்கள் படுகொலை!

  • January 31, 2026
  • 0 Comments

வடகிழக்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய போராளிக்குழுவினர் நடத்திய கொடிய  தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். போர்னோ (Borno) மாநிலத்தின் சபோன் காரி (Sabon Gari ) நகரில் பதுங்கியிருந்த துப்பாக்கிதாரிகள் 25 கட்டுமானத் தொழிலாளர்களைக் கொன்றதாக அவ் மாநிலத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்த நைஜீரியாவில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலும் மறுப்பதாக AP  இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இன்றைய […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் நில அதிர்வு!

  • January 31, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை Trincomalee மாவட்டத்திலுள்ள ரொட்டவெவ Rotawewa மற்றும் கோமரங்கடவல Komarangadawala ஆகிய பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 மணிக்கும் 3.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. இலங்கையில் திருகோணமலை , கண்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு அளவிலான நில அதிர்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன.

இந்தியா

கட்சி தாவல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சசி தரூர் எம்.பி.!

  • January 31, 2026
  • 0 Comments

காங்கிரஸிலிருந்து Congress வெளியேறி பா.ஜ.கவுடன் BJP சங்கமிக்கவுள்ளார் என வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் Shashi Tharoor. “ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்.” என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பங்கேற்றிருந்தார். இதன்போது பா.ஜ.கவில் இணைவது பற்றி ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் […]

error: Content is protected !!