ஆஸ்திரேலியா

ஆப்கான். தூதரகத்தை மூடுகிறது ஆஸ்திரேலியா!

  • February 2, 2026
  • 0 Comments

கன்பராவிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்படும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் செயல்பாடுகளை நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சியால் நியமிக்கப்பட்ட தூதுவர்களை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தலிபான்களை ஆப்கானிஸ்தான் மக்கள் சட்டப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிலிருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் […]

இந்தியா

பாம்புக் கடியால் வருடத்திற்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்!

  • February 2, 2026
  • 0 Comments

இந்தியாவில் பாம்பு கடியால் வருடத்திற்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குளோபல் ஸ்னேக்பைட் டாஸ்க்ஃபோர்ஸ் (ஜிஎஸ்டி) (Global Snakebite Taskforce) என்ற ஆவணப்படத்தில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 2000 மற்றும் 2019 க்கு இடையில், இந்தியாவில் 1.2 மில்லியன் இறப்புகள் வரை பதிவாகியிருக்கலாம் என்றும், சராசரியாக ஆண்டுக்கு 58,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் […]

ஐரோப்பா

UKவில் ஆளும் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடி – பதவி விலகும் மற்றொரு உறுப்பினர்!

  • February 2, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஆளும் அரசாங்கமான தொழிற்கட்சியில் இருந்து விலகுவதாக லார்ட் மண்டேல்சன் (Lord Mandelson) அறிவித்துள்ளார். பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் காரணமாக அரசாங்கத்திற்கு மேலும் சங்கடத்தை தர விரும்பவில்லை என்றும், இதன் காரணமாக உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள இராஜினாமா கடிதத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் வருதப்படுகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எனக்கு நிதி உதவி செய்ததாக கூறும் […]

உலகம்

காசாவில் தடைப்படும் மருத்துவ சேவை – காலக்கெடு விதித்த இஸ்ரேல்!

  • February 2, 2026
  • 0 Comments

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Doctors Without Borders) அமைப்பை இஸ்ரேல் தடை செய்துள்ளது. பாலஸ்தீன ஊழியர்களின் பட்டியலை வழங்க மறுத்ததை அடுத்து, அந்த அமைப்பை தடை செய்துள்ளதாக நேற்று அறிவித்தது. இது தொடர்பில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி தொடக்கத்தில் அமலுக்கு வந்த விதிமுறைகளின் கீழ் காசா மற்றும் மேற்குக் கரையில் செயல்படும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து இஸ்ரேல் கோரிய உள்ளூர் ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்கத் தவறியதை காரணம் […]

இந்தியா

ஒற்றுமையாகக் களமாடி அரியணையேறுவோம்: விஜய் சபதம்!

  • February 2, 2026
  • 0 Comments

” அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.” – என்று தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜய் Victory சூளுரைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் TVK ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு (02) ஈராண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு விஜய் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது. அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, ” என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான […]

அரசியல் இலங்கை செய்தி

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

  • February 2, 2026
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் Sri Lankan Parliament நாளை (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Speaker Jagath Wickramaratne தலைமையில் கூடவுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், அபிவிருத்தி அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாத–பிரதிவாதங்கள் இடம்பெறும் […]

விளையாட்டு

தொடரும் தோல்வி: திண்டாடுகிறது இலங்கை அணி!

  • February 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்து England அணியிடம் T20 தொடரையும் இழந்து தவிக்கின்றது இலங்கை Sri Lankan கிரிக்கெட் அணி. மூன்றாவது T20 போட்டி நாளை (3) நடக்கவுள்ள நிலையில், ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ODI 2-1 என கைப்பற்றி அசத்தியது. அதன்பின்னர் நடைபெற்ற முதல் T20 போட்டியில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம்!

  • February 2, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்துக்கு Kivul Oya project எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் Vavuniya – Nedunkerni இன்று (02) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை செல்லவுள்ளனர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் […]

கருத்து & பகுப்பாய்வு

06 மாதத்தில் அவுஸ்திரேலிய பொறிக்குள் சிக்கிய இந்திய பெண் – வெளிநாட்டு அனுபவம் பெரும் வைரல்

  • February 1, 2026
  • 0 Comments

வெளிநாட்டில் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கனவாக இருக்கலாம். வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம், புதிய சூழல் – இவை எல்லாம் ஈர்க்கும். ஆனால் உண்மையான அனுபவம் பல நேரங்களில் எதிர்பாராதது. சமீபத்தில், அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒரு இந்திய பெண்ணின் அனுபவம் வைரலாகி, வெளிநாட்டில், வாழ்வின் உண்மைகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பெண் இந்தியாவிலிருந்து 06 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனது அனுபவத்தில், பலரும் எதிர்பாராத உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நான் ஒரு […]

இலங்கை செய்தி

சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கில் கரி நாள் பேரணி – அனைவரும் பங்கேற்று வலுச்சேர்க்குமாறு யாழ் பல்கலை மாணவர்கள் அழைப்பு 

  • February 1, 2026
  • 0 Comments

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தனர். […]

error: Content is protected !!