இலங்கை

மீண்டும் 12000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • February 3, 2026
  • 0 Comments

உலக சந்தையின்  விலை உயர்வுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலை சுமார்   12,000 ரூபாயால்  அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரங்களின்படி,  24 காரட் தங்க சவரனின் விலை  380,000 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன்   நேற்று  338,000 ஆக இருந்த  22 காரட் பவுண் ஒன்று  349,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, உலக அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,816 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

காதலர் தினத்தில் புது நடிகையை கரம்பிடிக்கிறாரா தனுஷ்?

  • February 3, 2026
  • 0 Comments

தனது முதல் மனைவியை Aishwarya Rajinikanth விவகாரத்து செய்துள்ள நடிகர் தனுஷ் Dhanush தற்போது மகன்மாருடன் வாழ்த்து வருகின்றார். இந்நிலையில் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டம் மற்றும் புதிய இணை தொடர்பில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் கசிவது வழமை. அந்த வகையில் நடிகை மிருணாள் தாக்கூரை தனுஷ் கரம் பிடிக்கவுள்ளார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. காதலர் தினத்தில் இருவரும் கரம்பிடிப்பார்கள் எவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது அப்பட்டமான பொய்யென அறிவித்துள்ளார் நடிகை மிருணாள் தாக்கூர் […]

இந்தியா

புதுவித அரசியல் ஆட்டத்தில் சின்னம்மா?

  • February 3, 2026
  • 0 Comments

” தமிழக சட்டசபைத் தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம்.” என்று முன்னாள் முதல்வர் ஜெயலாலிதாவின் நெருங்கிய சகாவான சசிகலா Sasikala, தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று (03) அஞ்சலி செலுத்தினார். துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என இதன்போது அவரது ஆதரவாளர்கள் உறுதி எடுத்தனர். இது பற்றி சசிகலாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “எதிரிகள் யார் துரோகிகள் […]

இலங்கை செய்தி

“ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முயற்சி”

  • February 3, 2026
  • 0 Comments

“ஷிரந்தி ராஜபக்சவை Shiranthi Rajapaksa இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை Mahinda Rajapaksa வீழ்த்திவிடலாம் என NPP அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், FCID விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு […]

இலங்கை செய்தி

ஷிரந்தியுடன் FCID வந்த மஹிந்த: CID சென்றார் நாமல்!

  • February 3, 2026
  • 0 Comments

“ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு NPP அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார். அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார். FCID வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் […]

இலங்கை செய்தி

ராஜபக்ச குடும்ப உறுப்பினருக்கு சிவப்பு பிடி விறாந்து!

  • February 3, 2026
  • 0 Comments

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் Chamal Rajapaksa இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை Chamindra Rajapaksa கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று (2) மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷமிந்திர ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது . ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், ஷமிந்திர ராஜபக்ச […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் முதல் AI தொழில்நுட்ப நகரமாக பார்ன்ஸ்லி தெரிவு!

  • February 3, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் முதல் ‘ AI தொழில்நுட்ப நகரமாக’ பார்ன்ஸ்லி (Barnsley) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் AI பயிற்சி கருவிகளைச் சோதித்தல், குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு இலவச AI மற்றும் டிஜிட்டல் பயிற்சியை வழங்குதல் மற்றும் விரைவான NHS மருத்துவமனை சோதனைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குப்  பயிற்சியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் சிஸ்கோ (Cisco) ஆகிய நிறுவனங்கள் AI மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. மேலும் குறித்த நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட  பாடங்களும் […]

விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக களமிறங்கும் லசித் மலிங்க!!

  • February 3, 2026
  • 0 Comments

இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி பங்கேற்கும் ஆரம்ப சுற்று போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க செயல்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, லசித் மலிங்க வரும் 5 ஆம் திகதி முதல் இலங்கை அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பா

நோர்வே அரச குடும்பத்தின் வாரிசைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  • February 3, 2026
  • 0 Comments

நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மரிட்டினின் இரண்டாவது மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிற வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதி, அவரை நான்கு வாரங்களுக்குச் சிறையில் வைக்க ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய செய்தி விசாரணைக்கு வரும் நோர்வே இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்!

விளையாட்டு

ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக்கிண்ண தொடருக்குள் காலடி வைக்குமா இலங்கை?

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதி T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், T20 தொடரையும் ஏற்கனவே வென்று தொடரை தன் வசமாக்கியுள்ளது. இதனால், […]

error: Content is protected !!