இலங்கை செய்தி

” உண்மை வெளிவரும் நாளே எமக்கு சுதந்திரம்” வவுனியாவில் போராட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினமான இன்று , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் என  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கூறினர். வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சங்கப் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறினர். “ இலங்கைக்கு சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் […]

உலகம்

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் ICE முகவர்கள் – நீதிபதிகள் கடும் விமர்சனம்!

  • February 4, 2026
  • 0 Comments

குடியேறிகளை விடுவிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியமைக்காக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மீது அமெரிக்க கூட்டாட்சி நீதிபதிகள் கடுமையான விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மாவட்ட நீதிபதி ஜெர்ரி ஆர். பிளாக்வெல் (Blackwell), ICE இன் “ஆபத்தான” தோல்விகளை எடுத்துரைத்தார், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததற்காக அதிகாரிகள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படலாம் என்று பரிந்துரைத்தார். அதிகமான நபர்கள்  தடுத்து வைக்கப்பட்டமை மற்றும், வழக்குகளை தீர்ப்பதற்கான அதன் திறனை மீறியமையே நீதிமன்றத்தின்  உத்தரவுகளுக்கு இணங்காததற்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்தார். […]

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு ICC இறுதி எச்சரிக்கை விடுப்பு!

  • February 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு , சர்வதேச கிரிக்கெட் சபை ICC மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இதற்கு ICC கடும் எதிர்ப்பை வெளியிட்டது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. எனினும், […]

பொழுதுபோக்கு

‘லீடர்’ ஆக வருகிறார் லெஜெண்ட் சரவணன்!

  • February 4, 2026
  • 0 Comments

பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஆரம்பத்தில் விளம்பரத்தில் நடித்து – அதன்பின்னர் சினிமாவிலும் கால் பதித்தார். வியாபாரத்தை போலவே நடிப்பிலும் லெஜெண்ட் சரவணனன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜெண்ட் திரைப்படம் வெற்றிநடை போடவில்லை. படு மோசமான படமெனவும் கூறிவிட முடியாது, இந்நிலையிலேயே அடுத்ததாக சிறந்த கதை அம்சம் உள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் […]

இலங்கை செய்தி

அநுர அரசின் இனவாதமற்ற பயணத்துக்கு வாசு பாராட்டு!

  • February 4, 2026
  • 0 Comments

“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். “ இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும். ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்ட அரசாகும். பிரபு வர்க்கத்தினர் அல்ல. சாதாரண மக்களே ஆட்சியில் உள்ளனர். எனவே, ஏற்பட்ட மாற்றத்தை சிறந்த மாற்றமாக மாற்றுவதற்கு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் தடம் புரண்ட ரயில் : மாற்று வழியை பயன்படுத்த அறிவுரை!

  • February 4, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் சிக்கனல் பிரச்சினை மற்றும் ரயில் தடம் புரண்டதன் காரணமாக இன்று  ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் சேவைகள் தாமதமடையும் எனவும், மாற்று வழிகளை பின்பற்றுமாறும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. தென்கிழக்கு லண்டனின் செல்ஹர்ஸ்டில் (Selhurst) உள்ள ஒரு டிப்போவிற்குள் ரயில் தடம் புரண்டதுடன்,  லண்டன் பிளாக்ஃப்ரியர்ஸ் (Blackfriars) மற்றும் நோர்வுட் சந்திப்புக்கு இடையே சிக்னலில்  கோளாறு  ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய லண்டன் பிரிட்ஜ் ( London Bridg)  மற்றும் ஈஸ்ட் கிரின்ஸ்டெட் […]

இந்தியா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – பிரித்தானிய தம்பதியினரை கருப்பு பட்டியலில் சேர்த்த இந்தியா!

  • February 4, 2026
  • 0 Comments

பிரித்தானிய தம்பதியினரான லூயிஸ் கேப்ரியல் டி (Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின்  (Anushi Emma Christine) ஆகியோருக்கு “இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் புஷ்கரில் (Pushkar) பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டியதை தொடர்ந்து மேற்படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சுதந்திர பாலஸ்தீனம். இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்று எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21 அன்று இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக அறியப்படும் புஷ்கரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் […]

உலகம்

மியாமியில் காட்சிப்படுத்தப்படவுள்ள ட்ரம்பின் 22 அடி உயர தங்கச் சிலை!

  • February 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அடி உயர தங்கச் சிலை மியாமியில் (Miami) உள்ள டோரலில் (Doral) காட்சிப்படுத்தப்பட உள்ளது. மியாமியில் இடம்பெறும் 20 பேர் கொண்ட  உச்சிமாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வரும்போது, ​​இந்த சிலை காட்சிப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பீடத்தில் இருந்து 22 அடி உயரத்தில் நிற்கும் இந்த தங்கச் சிலையை நிர்மாணிக்க  கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளனர். குறித்த சிலையை நிர்மாணித்து வரும் சிற்பி ஆலன் கோட்ரில் (Alan Cottrill) சம்பள தகராறு […]

உலகம்

அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம் தொடங்கிய முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி !

  • February 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் $1.2 டிரில்லியன் பெறுமதியான நிதி சட்டமூலத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் வார இறுதியில் கூட்டாட்சி அரசாங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. 217-214 வாக்குகளுடன் குறித்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,  சட்டமூலம் அமெரிக்க மக்களுக்கு ஒரு பெரிய வெற்றி” என்று  கூறியுள்ளார்.  

விளையாட்டு

பாகிஸ்தானின் முடிவு மாறும்: அஸ்வின் நம்பிக்கை!

  • February 4, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நிச்சயம் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் Ravichandran Ashwin நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இந்தியாIndia -பாகிஸ்தான் Pakistan போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும். அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் […]

error: Content is protected !!