உலகம் செய்தி

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் நாளை பேச்சு!

  • February 5, 2026
  • 0 Comments

ஈரான் Iran மற்றும் அமெரிக்கா US ஆகிய நாடுகளுக்கிடையிலான அணு சக்தி தொடர்பான பேச்சு நாளை (06) வெள்ளிக்கிழமை ஓமானில் Oman நடைபெறவுள்ளது. இரு நாடுகளும் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த சர்ச்சையால் இரு தரப்பு சந்திப்பு நடக்காது என ஊகம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே சந்திப்பு தற்போது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்குரிய ஏற்பாட்டை செய்த ஓமானுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi நன்றி […]

உலகம் செய்தி

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது!

  • February 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதிக்கு Isaac Herzog இணையவழிமூலம் கொலை மிரட்டல் விடுத்தார் online death threat எனக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நியூடவுனைச் Newtown பகுதியைச் சேர்ந்த டார்சி டின்னிங் Darcy Tinning என்பவரே ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் AFP அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வரும் சர்வதேச பிரமுகருக்கு, தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார் என […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வியாழன் மிகப் பெரிய கிரகமா? : உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்!

  • February 4, 2026
  • 0 Comments

நமது சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கிரகமாக அறிவிக்கப்பட்டுள்ள வியாழன் கிரகம் நாம் நினைத்ததை போன்று அவ்வளவு பெரிதாக இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் ரோபோ ஜூனோ  (robotic Juno) விண்கலத்தால் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வியாழனின் அளவு மற்றும் வடிவத்தின் மிகத் துல்லியமான அளவீடுகளை விஞ்ஞானிகள் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அதன் சிக்கலான உட்புற அமைப்பை ஆராய முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜூனோ அவதானிப்புகளிற்கு அமைய,  வியாழனின் பூமத்திய […]

ஐரோப்பா

UK சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை – மெத்தனமாக செயற்படும் அதிகாரிகள்!

  • February 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ட்ரோன்கள் மூலம் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறைநிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளிலும் இந்த விடயத்தில் மெதுவாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 மற்றும் மார்ச் 2025 க்கு இடையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1,712 ட்ரோன் ஊடுருவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள கைதிகளில் சுமார் 50 சதவீதம் பேர் போதைப்பொருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தேசிய தணிக்கை அலுவலகம்  எடுத்துக்காட்டியுள்ளது. […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் இருந்து 19 தொலைபேசிகள் மீட்பு!

  • February 4, 2026
  • 0 Comments

காலி சிறைச்சாலையின் ஏ, பி, சி மற்றும் டி ஆகிய சிறைச்சாலைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​உரிமை கோரப்படாத கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்கள்  கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, ​​அதிகாரிகள் மொத்தம் 19 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகளை மீட்டுள்ளனர். கூடுதலாக, 4 கிராம் மற்றும் மொத்தம் 384 மில்லிகிராம் எடையுள்ள 58 சிறிய ஹெராயின் […]

உலகம்

பிலிப்பைன்ஸில் 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லொறி : 09 பேர் பலி!

  • February 4, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் மலைப்பாதையில் பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 09 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்ரோஸ் ஓரியண்டல் (Negros Oriental) மாகாணத்தில் உள்ள பயாவன் (Bayawan) நகரில் கச்சா எண்ணெயை விநியோகித்துவிட்டு மீள திரும்பும்போது விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.  

ஐரோப்பா

அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா சீர்திருத்த UK கட்சி?

  • February 4, 2026
  • 0 Comments

பிரிட்டனை ஆட்சி செய்ய தனது கட்சி பாதி அளவே தயார் நிலையில் உள்ளது என்பதை சீர்திருத்த UK கட்சி தலைவர் நிகல் ஃபராஜ் (Nigel Farage) ஒப்புக்கொண்டுள்ளார். பிபிசியின் ஆட்சி செய்ய தயாரா என்ற ஆவணப்படத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், சாத்தியமான பொதுத் தேர்தலுக்கு கட்சியின் தயார்நிலை பற்றி விளக்கமளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், பிரித்தானிய அரசியலின் மைய-வலதுசாரிகள் சீர்திருத்தத்தைச் சுற்றி ஒன்றுபடுவதால், சீர்திருத்த UK இல் சேர்ந்துள்ள கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து […]

அரசியல் இலங்கை செய்தி

தீவிர அரசியலுக்கு விடை கொடுத்தார் மைத்திரி! 

  • February 4, 2026
  • 0 Comments

தான் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்.” எனவும் அவர் கூறினார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி SLFP ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர் மைத்திரிபால சிறிசேன. 2014 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கி வெற்றி […]

ஐரோப்பா

ஸ்பெயின் அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடை : பிரதமரை பாசிச சர்வாதிகாரி என விமர்சிக்கும் மஸ்க்!

  • February 4, 2026
  • 0 Comments

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின் அரசாங்கத்தின் முடிவை  பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். ஸ்பானிஷ் பிரதமரை “உண்மையான பாசிச சர்வாதிகாரி” மற்றும் “கொடுங்கோலர்” என்று அவர் விவரித்துள்ளார். இதற்கிடையே சைபர் குற்ற விசாரணையின் ஒரு பகுதியாக X இன் பாரிஸ் அலுவலகங்களில் பிரெஞ்சு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அல்காரிதம் கையாளுதல், மோசடி தரவு பிரித்தெடுத்தல் மற்றும் X இன் AI சாட்போட், க்ரோக்கைப் பயன்படுத்தி, குழந்தை துஷ்பிரயோக […]

ஐரோப்பா

லார்ட் மண்டேல்சன் இங்கிலாந்திற்கு துரோகம் இழைத்துள்ளார் – ஸ்டார்மர் கருத்து!

  • February 4, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) லார்ட் மண்டேல்சனின் ( Lord Mandelson)  தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அவர் இங்கிலாந்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் ( Sir Keir Starmer) தெரிவித்துள்ளார். லார்ட் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்ததற்கு வர்த்தம் தெரிவித்த அவர், தற்போது இருக்கும் அறிவுடன் அவர் செயற்பட்டிருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மண்டேல்சனை  பிரிவி கவுன்சிலில் இருந்து (Privy Council) நீக்குவதற்கு மன்னருடன் விவாதித்ததாகவும் […]

error: Content is protected !!