ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை உலுக்கும் புயல் : ஒருவர் உயிரிழப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் லியோனார்டோ (Leonardo) புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 60 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. மேலும் ஸ்பெயினின் அண்டலூசியாவில் (Andalusia) 3,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவசர சேவைகள் மற்றும் இராணுவ வீரர்கள் உதவிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். போர்ச்சுகல் தனது எச்சரிக்கை அளவை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது, […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அட்டகாசம் – 162 பேர் பலி!

  • February 5, 2026
  • 0 Comments

மேற்கு நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதம் ஏந்திய குழுவினர் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோரோ (Woro) மற்றும் நுகு (Nuku) ஆகிய கிராமங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைந்த ஆயுதக் குழு இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் கிராமவாசிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தாக்குதலில் 170 இற்கும் மேற்பட்டோர் […]

ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீன் விவகாரத்தில் மண்டேல்சனின் பொய்களை நம்பியதற்கு வருந்துகிறேன் – பிரதமர் கவலை

  • February 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரதமர் கியர் ஸ்டார்மர்,  வருத்தம் தெரிவித்தார். கிழக்கு சசெக்ஸில் நடந்த நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சன் சொன்ன பொய்களை நான் நம்பியதற்கு வருந்துகிறேன்” என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்மர் தனது “பிரைட் இன் பிளேஸ்” திட்டம் குறித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், லார்ட் மண்டேல்சனைச் சுற்றியுள்ள சர்ச்சை காரணமாக, உரையின் தொடக்கமே அந்த விவகாரமாக மாறியது. ஜெஃப்ரி […]

இலங்கை செய்தி

மாலைதீவில் இலங்கைக்கு சொந்தமான இரு படகுகள் பறிமுதல்

  • February 5, 2026
  • 0 Comments

மாலைதீவின் கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீன்பிடி படகுகளை தேசிய கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாலைதீவு தேசிய கடலோர காவல்படை மற்றும் விமானப்படை  நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாலைதீவு தேசிய கடலோர காவல்படையினரின் கூற்றுப்படி, வடக்கு மாலைதீவில் உள்ள அலிஃப் கேலாவிலிருந்து சுமார் 109 கடல் மைல் தொலைவில் இந்த மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைக்காக குல்ஹுதுஃபுஷி துறைமுகத்தில் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்களால் போராட்டம்

  • February 5, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளனர். வாகரை பிரதேசத்தில் உள்ள கடற்றொழிலாளர் அமைப்புகள் இணைந்து இன்று  (05) இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவானோர் மட்டக்களப்பு ,கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட காலமாக கரை வலை மீன்பிடியில் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

முழு கிரகத்தையும் அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் ரஷ்யா வசம் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை!

  • February 5, 2026
  • 0 Comments

முழு கிரகத்தையும் அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான தேசியவாத நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லேவ் (Alexey Zhuravlev) அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான START ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரம் “எந்தவொரு நாட்டையும் அழிக்கக்கூடிய அல்லது முழு கிரகத்தையும் முற்றிலுமாக அழிக்கக்கூடிய ஆயுதங்களை ரஷ்யா வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். “சர்வதேச அணுசக்தி பாதுகாப்பை நிர்வகிக்கும் அடிப்படை ஆவணமான மூலோபாய ஆயுதக் குறைப்பு […]

இலங்கை செய்தி

எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்கள் – 188 முறை இலங்கையின் பெயர்

  • February 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) ஆவணக் கோப்புகளில் இலங்கையின் பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன. இந்த ஆவணக் காப்பகத்தில் உள்ள மின்னஞ்சல்கள், பயண விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கான குறிப்புகளை ஆய்வு செய்ததில், இலங்கை தொடர்பான பெயர்கள் பல இடங்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இவை எப்ஸ்டீனின் குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தனிநபர்கள் இலங்கைக்கு […]

இலங்கை செய்தி

டிட்வா புயல் பாதிப்பு – நாளை ஜனாதிபதியின் கண்டி விஜயத்தில் இழப்பீடு

  • February 5, 2026
  • 0 Comments

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாவட்டத்தில் பல மேம்பாட்டு முயற்சிகளை தொடங்கி வைக்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (06) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தொழில்களுக்கு இழப்பீடு வழங்குதல், இடம்பெயர்ந்தவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தைத் தொடங்குதல் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குதல் ஆகியவை அடங்கும். பிரதான இழப்பீட்டு வழங்கும் விழா நாளை காலை 9.00 மணிக்கு குண்டசாலையில் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பில் இன்று வாக்கெடுப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் தேசிய வங்கியான Bank of England  2026 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதக் குறைப்பு தொடர்பில் இன்று தனது  வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. குறிப்பாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.75 சதவீதம் என்ற நிலையில் பராமரிக்க முடிவு செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நாணயக் கொள்கைக் குழு (MPC) நிலையான பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிக ஊதியங்கள் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிலையான அணுகுமுறையை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த […]

ஐரோப்பா

லார்ட் பீட்டர் மண்டேல்சனால் ஸ்டாமருக்கு ஏற்பட்ட தலையிடி : உட்கட்சியிலேயே குழப்பம்!

  • February 5, 2026
  • 0 Comments

லார்ட் பீட்டர் மண்டேல்சனை  (Lord Peter Mandelson)  அமெரிக்க தூதராக அங்கீகரித்தமைக்காக பிரதமர்  சர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தொழிற்கட்சி எம்.பி.க்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் அவர்களின் உறவின் அளவு குறித்து மண்டேல்சன் பொய் உரைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில், வணிகச் செயலாளராகப் பணியாற்றியபோது லார்ட் மண்டேல்சன் எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசாங்கத் தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விடயங்கள் மண்டேல்சனின் செயற்பாடுகள் மீதான நம்பகத்தன்மைய சீர்குலைத்துள்ளன. […]

error: Content is protected !!