உலகம்

அமெரிக்காவில் பாதசாரிகள் மீது மோதிய கார் – சம்பவ இடத்திலேயே மூவர் பலி!

  • February 6, 2026
  • 0 Comments

லொஸ் ஏஞ்சல்ஸின்  (Los Angeles) வெஸ்ட்வுட்  (Westwood) பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் துரதிஷ்டவசமாக மேற்படி விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காரை வயதான பெண் ஓட்டுனர் ஒருவர் செலுத்தியதாகவும், அவர் தற்போது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி […]

இலங்கை செய்தி

பிரிட்டனிடம் இழப்பீடு கோருமாறு சஜித் முன்மொழிவு: அரசு பச்சைக்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

“காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான இழப்புக்கு , இழப்பீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், வெளிவிவகார அமைச்சரிடம் எழுப்பட்டிருந்த கேள்விகளுக்கு விஜித ஹேரத் பதிலளித்தார். அவ்வேளையில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மேற்படி விடயம் பற்றி அமைச்சரின் கவனத்தை […]

உலகம்

பாரசீக வளைகுடாவில் இரு கப்பல்களை பறிமுதல் செய்த ஈரான்! 15 பணியாளர்கள் கைது!

  • February 6, 2026
  • 0 Comments

பாரசீக வளைகுடாவில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை நேற்றைய தினம் ஈரான் கைப்பற்றியதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கப்பலில் எரிபொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் கப்பல் எந்த நாட்டின் கொடியின் கீழ் பயணித்தது அல்லது எந்த நாட்டிற்கு சொந்தமானது என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. புரட்சிகர காவல்படையின் கடற்படையின் பிராந்திய தளபதியான ஜெனரல் ஹெய்டர் ஹொனாரியன் மொஜாரட் (Heidar Honarian Mojarrad) டேங்கர்கள் டீசல் உட்பட சுமார் 1 மில்லியன் லிட்டர் எரிபொருளை […]

உலகம்

காலாவதியான அணுவாயுத ஒப்பந்தம் : புட்டின் விருப்பம், ட்ரம்ப் நிராகரிப்பு!

  • February 6, 2026
  • 0 Comments

ரஷ்யா –  அமெரிக்காவிற்கு இடையிலான புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீளவும் ஏற்படுத்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விருப்பம்  தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக, ஒரு புதிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஒப்பந்தம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே மேற்படி ஒப்பந்தம் காலாவதியானமையானது அதீத பாதுகாப்பு […]

இலங்கை செய்தி

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  • February 6, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியுடன் அதற்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதன்பின்னர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் […]

இந்தியா தமிழ்நாடு

கமலின் கம்பீர உரையை கொண்டாடும் தமிழர்கள்: திண்டாடும் பா.ஜ.க.!

  • February 6, 2026
  • 0 Comments

தமிழ் மொழியின் மேன்மை தொடர்பில் மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய உரை உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூகவலைத்தளங்களில் உள்ள தமிழர்கள் கமலின் உரையை பதிவுகள்மூலம் கொண்டாடிவருகின்றனர். தமிழ் மொழி யாசகம் பெறுவதற்குகூட உதவாது என புலவர் ஒருவர் கூறினார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே கமல்ஹாசன் காத்திரமானதொரு உரையை நிகழ்த்தினார். இந்நிலையில் பா.ஜ.க. அரசியல் பிரமுகர்கள் சிலர் கமலின் உரையை […]

உலகம்

அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று!

  • February 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் இன்று ஓமானில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச  அளவில் கவனம் பெற்றுள்ளன. இதன்போது  பாலிஸ்டிக் ஏவுகணைகள், பிராந்திய பினாமி நெட்வொர்க்குகள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் போன்ற பிற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியானது என்று பல தசாப்தங்களாக கூறிவருகிறது. இருப்பினும் மேற்குலக நாடுகள் இது தொடர்பான கவலைகளை தொடர்ச்சியாக எழுப்பி […]

உலகம்

மருந்துகளை மலிவு விலையில் கொள்வனவு செய்யும் TrumpRx திட்டம் நடைமுறைக்கு!

  • February 6, 2026
  • 0 Comments

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்யும் TrumpRx என்ற ஆன்லைன் போர்டலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த செயற்திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யும் மருந்துகளை அமெரிக்கர்ளுக்கு மலிவான விலையில் வழங்குவதே இதன் நோக்கம் என அவர் அறிவித்துள்ளார். உதாரணமாக Ozempic மற்றும் Wegovy போன்ற பிரபலமான GLP-1 எடை இழப்பு மருந்துகளின் விலைகள் 1000 டொலருக்கும் அதிகமாக இருந்த நிலையில், […]

இந்தியா தமிழ்நாடு

தி.மு.க. தேர்தல் விஞ்ஞாபனம் மார்ச் முதல்வாரம் வெளியீடு: விஜய் அணியும் புது வியூகம்!

  • February 6, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.கவின் DMK தேர்தல் விஞ்ஞாபனம் election manifesto எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது என தெரியவருகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தற்போது இதற்குரிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பின் கருத்துகளை கேட்டறிந்துவருகன்றது. ‘‘மக்களின் கருத்துகளை கேட்டறிந்துதான் இந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய […]

உலகம்

சீனாவில் தம்பதிகளை உளவு பார்க்கும் மூன்றாவது கண்!! குறையாத அச்சம்!

  • February 6, 2026
  • 0 Comments

சீனாவில்  விடுதிகளில் இரகசிய கேமராக்களை பயன்படுத்தும் செயற்பாடு இன்னும் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தங்கள் காதலன்  அல்லது காதலியோடு விடுதிகளுக்கு வரும் பெரும்பாலானோரின் பாலியல் ரீதியான காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனை தடுக்க அல்லது கையாள பெண்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக உடைமாற்றும் அறைகளில் கூடாரம் போன்ற அமைப்பை உருவாக்கி அதனை பயன்படுத்துவது, கேமராக்களை இனங்காணப்பது தொடர்பான ஸ்மார்ட் யோசனைகளை முன்வைப்பது என பல கட்ட […]

error: Content is protected !!