உலகம் செய்தி

தாய்லாந்தில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத் தேர்தல்!

  • February 8, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெறுகிறது. பல வருட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இடம்பெறும் இந்த தேர்தலில் மில்லியன் கணக்கான தாய்லாந்து மக்கள் வாக்களிக்க உள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் அனுடின் சான்-ஓ-சாவால் இந்த  பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது பூமிபோல் அதுல்யாதேஜ் கட்சியோ அல்லது வாக்கெடுப்பில் முன்னணியில் இருக்கும் மக்கள் கட்சியோ இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள 500 இடங்களில் எந்தக் கட்சியும் […]

இலங்கை

போராட்டம் நடத்தினாலும் சம்பள உயர்வு வழங்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!

  • February 8, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது தவணை வழங்கப்படும் வரை, பொதுத்துறை ஊழியர்களுக்கு எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது கொடுப்பனவுகளுக்காக போராடுவது நியாயமானதல்ல என்றார். சம்பள உயர்விற்காக அரசாங்கம் 330 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டு […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டு தாக்குதல் –   ISIS  அமைப்பு பொறுப்பேற்பு!

  • February 8, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு  ISIS  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காதிஜா அல்-குப்ரா (Khadija Al-Kubra) என அறியப்படும் நபர் தற்கொலை குண்டு தாக்குதலை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதல்தாரியின் தாய், சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்புடைய செய்தி  பாகிஸ்தானில் […]

இலங்கை

போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரொக்கெட் லாஞ்சர்கள் கண்டுப்பிடிப்பு!

  • February 8, 2026
  • 0 Comments

விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் மூன்று ரொக்கெட் லாஞ்சர்கள் மட்டக்களப்பில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட குறித்த ரொக்கெட் லாஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது இந்த லாஞ்சர்கள் இனங்காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

விளையாட்டு

அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா

  • February 7, 2026
  • 0 Comments

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 29 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற  இந்த போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு […]

உலகம் செய்தி

பலஸ்தீனியர்கள் சங்கிலியில் கட்டி நாடுகடத்தப்படுகிறார்களா?

  • February 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து பலஸ்தீனியர்களை நாடுகடத்தும் விமானங்கள், அயர்லாந்தின் கிளேர் கவுண்டியில் (County Clare) உள்ள ஷானன் விமான நிலையம் (Shannon Airport) வழியாக சென்றது குறித்து அந்நாட்டு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) க்கு நன்கொடையளித்த தொழிலதிபர் கில் டெசர் (Gil Dezer) க்கு சொந்தமான தனியார் ஜெட் விமானம், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத் துறை ICE […]

பொழுதுபோக்கு

புது வாழ்க்கையை தொடங்கிய சரண்யா பொன்வண்ணனின் மகள் – பிரபலங்கள் பலரும் வாழ்த்து

  • February 7, 2026
  • 0 Comments

நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கு ஒக்டோபர் மாதம் டானி பிலிப் பாபு என்பவருடன் ஊட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து 02 ஆம் திகதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ‘இதனையடுத்து, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார். மேலும், நடிகர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், தனுஷ், சசிகுமார், […]

இந்தியா தமிழ்நாடு

தேர்தல் வந்தால்தான் தமிழகம் நினைவுக்கு வரும் – இனி பிரதமர் திருக்குறள் சொல்வார்

  • February 7, 2026
  • 0 Comments

கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை” என தமிழக வெற்றிக்கழகத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விருதுநகரில் இன்று நடைபெற்ற நிலையில் இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த உதயநிதி, “எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முரட்டு அடிமை” கொள்கை, இலட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் […]

அரசியல் இலங்கை செய்தி

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: 17 ஆம் திகதி சபையில் விவாதம்!

  • February 7, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முழு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே மேறபடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையிலேயே மேற்படி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 17 […]

செய்தி

“வடக்கு, கிழக்கில் முகாம்கள் இருப்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு” – மஹிந்த அணி கண்டுபிடிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார Shantha Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை […]

error: Content is protected !!