வலுவான எதிரணி மலரும்: ஐதேக நம்பிக்கை
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardena தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம். கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். […]













