இலங்கை செய்தி

மெட்ரோ பஸ் சேவை ஒகஸ்ட் முதல் அமுலுக்கு வருகிறது

  • February 12, 2026
  • 0 Comments

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் […]

உலகம் செய்தி

ட்ரம்ப் அனுமதியுடன் மினசோட்டாவில் குடியேற்ற கண்காணிப்பு தீவிரம்

  • February 12, 2026
  • 0 Comments

மினசோட்டாவில் குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் அதிகரிக்கப்படும் என அமெரிக்க எல்லைப் பேரவைத் தலைவர் டாம் ஹோமன் தெரிவித்துள்ளார். இதற்காக அமெஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “இந்த நடவடிக்கையின் மேற்பார்வை மற்றும் வெற்றியை உறுதி செய்ய நான் மினசோட்டாவில் சிறிது காலம் தங்குவேன். உள்ளூர் அதிகாரிகள் கூட்டாட்சி குடியேற்ற அதிகாரிகளுடன் அதிக ஒத்துழைப்பு செய்ததால், தற்போது சரணாலயம் இல்லாத மாநிலமாக மினசோட்டா மாறிவிட்டது.” என்றார். இதுவரை, கடந்த […]

இலங்கை செய்தி

கடவுச்சீட்டு மற்றும் விசா விநியோகம் வழமைக்கு

  • February 12, 2026
  • 0 Comments

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு காரணமான கணினி அமைப்பிலிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது. இருப்பினும், தற்போது கணினி கட்டமைப்பு முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே, திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் 1962 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது திணைக்களத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!

  • February 12, 2026
  • 0 Comments

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார். சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி […]

உலகம் செய்தி

பிரான்ஸிடமிருந்து 3.25 இலட்சம் கோடி ரூபாவுக்கு 114 ரபேல் போர் விமானங்களை பெறும் இந்தியா

  • February 12, 2026
  • 0 Comments

பிரான்சிடமிருந்து 3.25 இலட்சம் கோடி ரூபாவுக்கு 114 ரபேல் போர் விமானங்களை பெறும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். அவரது வருகையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனை முன்னிட்டு, இந்திய விமானப் படைக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்துக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு […]

உலகம் செய்தி

இம்ரான் கானுக்கு பார்வை குறைபாடு – வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் புகார்

  • February 12, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, சிறை அதிகாரிகள் சரியான மருத்துவ உதவிகளை வழங்கவில்லை என்பதால் வலது கண்ணில் 15% மட்டுமே பார்வை உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு பார்வை குறைபாட்டை அனுபவிக்கத் தொடங்கியதாவும்,  சிறை கண்காணிப்பாளர்கள் கண் மருந்து வழங்குவது தவிர வேறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் சல்மான் சஃப்தார் கூறியுள்ளார். ஜனவரி 24 அன்று, கான் பிம்ஸ் மருத்துவமனையில் […]

செய்தி

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியது ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • February 12, 2026
  • 0 Comments

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் (Shannon Cowlin) தெரிவித்தார். பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைக்கிறது – ஈரான் பாதுகாப்புத் தலைவர்

  • February 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சிக்கிறது என ஈரான் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி,  குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் பிராந்தியத்தில் புதிய போர் சூழல் உருவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “எங்கள் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் மட்டுமே, இஸ்ரேலுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இஸ்ரேல் நாசமாக்கும் நோக்கத்துடன் குறைமதிப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். செப்டம்பரில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து கத்தாரில் நடந்த தாக்குதல், பிராந்திய அமைதியை பாதித்தது என்றும் அவர் […]

விளையாட்டு

இத்தாலி அணி அசத்தல் வெற்றி!

  • February 12, 2026
  • 0 Comments

இத்தாலி Italy மற்றும் நேபாளம் Nepal அணிகளுக்கிடையிலான போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T 20 உலக்கிண்ண தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் இன்று மோதின. வான்கடே Wankhede மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. 124 என்ற வெற்றி இலக்கை […]

உலகம் செய்தி

சூடான் நைல் நதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழப்பு

  • February 12, 2026
  • 0 Comments

வடக்கு சூடானில் நைல் நதி மாநிலத்தில் பயணிகள் படகு மூழ்கியதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளதா சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சூடானின் இறையாண்மை கவுன்சில் உறுதிசெய்தது. சுமார் ஏழு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன சுமார் 12 பேரை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிவில் பாதுகாப்பு உதவி இயக்குநர் ஜெனரல் பொலிஸ் மேஜர் குராஷி ஹுசைன் தெரிவித்துள்ளார். […]

error: Content is protected !!