பொழுதுபோக்கு

உயிருள்ளவரை உஷா முதல் காதலர் தினம்வரை…!

  • February 13, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் காதலர் தினம் நாளை (14) கொண்டாடப்படுகின்றது. காதலர் தினத்தை இலக்கு வைத்து சில காதல் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில காதல் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகியது. 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார். அதுபோல கௌதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, […]

உலகம்

தென் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 02 பேர் உயிரிழப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கருப்பினத்தவர்களுக்கான கல்லூரியான தென் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் உயரிழந்த நிலையில் மற்றொரு நபர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து குறித்த வளாகம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஹுஜின் சூட்ஸ்  (Hugine Suites) மாணவர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் […]

ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் கொட்டி தீர்க்கும் பனி : மக்களின் கவனத்திற்கு!

  • February 13, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவிற்கான இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வானிலை மையத்தின் அறிவிப்பிற்கு அமைய இன்று பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்றும், இரவு முழுவதும் வெப்பநிலை குறைந்து குளிராக இருக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. குறித்த வானிலை மாற்றமானது நாளை தினத்திற்கும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதீத பனிப்பொழிவால் ஏற்படும் ஆபத்தான நிலைமைகள் குறித்தும் மக்கள்  கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்தியா தமிழ்நாடு

ஆளுநராகிறார் ஓ.பி.எஸ்? புது வியூகம் வகுக்கிறது பா.ஜ.க.!

  • February 13, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam (OPS) விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பா.ஜ.க. BJP தீவிரம் காட்டிவருகின்றது. பல பகுதிகளில் வெற்றிநடை போட்டாலும் தமிழகத்தில் கால் பதிப்பதென்பது பா.ஜ.கவுக்கு தொடர்ந்து எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. எனவே, அ.தி.மு.க. தலைவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே தி.மு.கவை வெல்ல முடியும் என பா.ஜ.க. […]

ஐரோப்பா

சமூக ஊடகங்களை அணுகுவதற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவை -போர்த்துகலில் புதிய சட்டம்!

  • February 13, 2026
  • 0 Comments

13 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கு  பெற்றோரின் ஒப்புதல் தேவை என்ற சட்டமூலம் போர்த்துகளில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 148-69 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம் 13 பேர் வாக்களிக்கவில்லை.  ஐரோப்பாவில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் முதல் உறுதியான சட்டமன்ற நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியின் (PSD)  சட்டத்தின் வரைவு ஆசிரியர்கள், சைபர்புல்லிங், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் வேட்டையாடும் நபர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த முறை […]

உலகம்

தைவான் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து!

  • February 13, 2026
  • 0 Comments

தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி விதிக்கும் இறுதி பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட ஆவணங்களில், 2025 முதல் 2029 வரை அமெரிக்க பொருட்களின் கொள்முதலை கணிசமாக அதிகரிக்க தைவான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில்,  $44.4 பில்லியன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய், $15.2 பில்லியன் சிவில் விமானங்கள் மற்றும் இயந்திரங்கள், $25.2 பில்லியன் பவர் கிரிட் உபகரணங்கள் […]

இந்தியா

விமான விபத்து குறித்து இத்தாலி ஊடகம் சர்ச்சை செய்தி: இந்தியா மறுப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

அகமதாபாத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் இத்தாலி ஊடகமொன்று வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. “விசாரணை முடிவடையாத நிலையில், ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்” என்று இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி விமான விபத்து தொடர்பில் இத்தாலியின் கோரியர் டெல்லா செரா என்ற நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், விமானி […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு: பிரிட்டன் 2ஆவது இடத்தில்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 08 வரையான காலப்பகுதிக்குள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 103 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 64 ஆயிரத்து 500 பேரும், பிரிட்டனில் இருந்து 38 ஆயிரத்து 823 பேரும், ரஷ்யாவில் இருந்து 34 ஆயிரத்து 80 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து 23 ஆயிரத்து 177 பேரும், […]

இலங்கை

செயலிழந்த கணினி அமைப்பு முழுமையாக மீட்பு – கடவுச்சீட்டு சேவைகள் வழமைக்கு!

  • February 13, 2026
  • 0 Comments

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்தார். இதற்கமைய  பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும்,  அனைத்து பிராந்திய கிளைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய கோரிக்கைகள் […]

செய்தி

ஜெர்மனியில் வழமைக்கு திரும்புமா விமான சேவைகள்? எதிர்பார்ப்பில் பயணிகள்!!

  • February 13, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் தடைப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.  இதன்காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. வெரினிகுங் காக்பிட் (Vereinigung Cockpit) மற்றும் யுஎஃப்ஒ (UFO) தொழிற்சங்கங்கள் தலைமையிலான தொழில்துறை நடவடிக்கை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியது. இதன்படி பெரும்பாலான விமானங்கள் பிராங்பேர்ட்டின் (Frankfurt) முக்கிய மையத்தில் தரையிறக்கப்பட்டன. இதனால் சுவிஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த பயணிகள் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. […]

error: Content is protected !!