இலங்கை செய்தி

Rebuliding Sri Lanka நிதியத்திற்கு கலிபோர்னியா விகாரையிடமிருந்து 21,500 டொலர் நன்கொடை

  • February 13, 2026
  • 0 Comments

Rebuliding Sri Lanka நிதியத்திற்கு அமெரிக்காவின் தெற்கு கலிபோனியாவிலுள்ள சன்வெலி மைத்ரி விகாரையிடமிருந்து 21500 அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நன்கொடை சேகரிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 04 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சன்வெல்லி மைத்ரி விஹாரையின் விஹாராதிபதி  கலாநிதி அபரெக்கே புஞ்சசிறி தேரரின் உத்தரவின் பேரில், இந்த நன்கொடை இலங்கையின் தூதர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது.

உலகம்

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய பெண்ணுக்கு 260 கோடி இழப்பீடு!

  • February 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் பொலிஸாரின் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய பெண்ணின் குடும்பத்தினருக்கு 260 கோடி இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜானவி கண்டுலா என்ற மாணவி, அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள நோர்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாலையை கடக்கும்போது பொலிஸாரின் வாகனம் மோதி உயிரிழந்தார். அந்தப் பகுதியில் வாகனங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே […]

உலகம்

பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • February 13, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  குறித்த நிலநடுக்கமானது,   ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை செய்தி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்

  • February 13, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி […]

இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவோருக்கான அவசர அறிவிப்பு

  • February 13, 2026
  • 0 Comments

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாதோர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று,  விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (14) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, […]

இலங்கை செய்தி

T-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைபெறும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை விடுத்து பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த போட்டி தொடரின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு […]

இலங்கை

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

  • February 13, 2026
  • 0 Comments

அக்குரேகொடவில் சற்றுமுன் இடம்பெற்ற நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடிக்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.   அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வாகனத்தில் இருந்த இருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும் தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஒபாமா சகாப்தக் கொள்கையை இரத்து செய்தார் ட்ரம்ப்!

  • February 13, 2026
  • 0 Comments

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பொது சுகாதாரம் மற்றும் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்ற 15 ஆண்டுகால தீர்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது. இதன்மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் மத்திய அரசின் திறனை ட்ரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவன நிர்வாகி லீ செல்டினுடன் (Lee Zeldin)  இணைந்து தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த 15 ஆண்டுகால தீர்ப்பானது அமெரிக்க வாகனத் தொழிலை கடுமையாக சேதப்படுத்தியதாகவும், அமெரிக்க நுகர்வோருக்கு விலைகளை […]

உலகம் செய்தி

சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எல் கைதிகள் ஈராக்கிற்கு மாற்றம்

  • February 13, 2026
  • 0 Comments

ஈராக் அரசு, சிரியாவில் உள்ள சிறைகளில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எல் தொடர்புடைய கைதிகளை தனது நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றி வருவதாக அறிவித்துள்ளது. இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஈராக் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி வேண்டுகோளின் பேரில், ஈராக் இந்த கைதிகளின் இடமாற்றங்களையும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் முன்னெடுத்து வருகிறது என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அகமது லைபி தெரிவித்தார். சுமார் 3,000 கைதிகள்  மாற்றப்பட்டதாகவும், ஈராக் பல […]

ஐரோப்பா

போர் நிறுத்தம் கொண்டுவரப்படும்வரை தேர்தல் நடைபெறாது – ஜெலென்ஸ்கி திட்டவட்டம்!

  • February 13, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “மோசமான ஒப்பந்தத்தை” ஒரு பொது வாக்கெடுப்புக்காக முன்வைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களும் போர்நிறுத்தமும் நிறுவப்பட்ட பின்னரே உக்ரைன் தேர்தல்களை நடத்தும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். முனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதான ஒப்பந்தம், வாக்கெடுப்பு இரண்டிற்கும் உக்ரைன் தயாராக இருப்பதாக […]

error: Content is protected !!