செய்தி

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

  • February 14, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் 23 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து Scotland அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று, 5 […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வானிலையில் மாற்றம்

  • February 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பதிவான பலத்த மழை வீழ்ச்சிக்கு பின்னர் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்க்டிக் காற்றின் தாக்கத்தால் வார இறுதி குளிர்ச்சியாகவும் உறைபனியுடனும் தொடங்கியுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதிகளில் மிதமான பனிப்பொழிவு மற்றும் பனி படர்ச்சி காணப்படுகின்றது. சனிக்கிழமை பெரும்பாலான இடங்களில் வெயில் காணப்பட்டாலும், இந்த நிலை தற்காலிகமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மேலும் பனியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அலுவலகம் (Met Office), ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு […]

உலகம்

53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா!

  • February 14, 2026
  • 0 Comments

53 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிப்பை நடைமுறைப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்புடைய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. சீனா, தான் தூதரக உறவுகளைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மே 1, 2026 முதல் இந்த வரியை அமுற்படுத்தவுள்ளது. இது தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  கூட்டுப் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திட தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் “பசுமை சேனல்” போன்ற மேம்படுத்தப்பட்ட […]

உலகம் செய்தி

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களின் பேரழிவு – மியூனிக் மாநாட்டில் செலென்ஸ்கி எச்சரிக்கை

  • February 14, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் ஏற்படுத்தும் பேரழிவு குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) வெளிப்படுத்தியுள்ளார். “ரஷ்ய ஆக்கிரமிப்பினால் ஏற்படும் சவால்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் உங்கள் நாட்டின் நலன்களைப் பாதுகாக்க உலகின் ஆதரவைப் பெறும் போராட்டத்திற்கும் நீங்கள் தயாரா என்றும் Volodymyr Zelenskyy உலக தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஜனவரி மாதத்தில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாகவும் […]

இலங்கை கல்வி

மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை

  • February 14, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.

உலகம் முக்கிய செய்திகள்

டொலருக்கு பதிலாக சீனாவின் யுவான் நாணயம் – பெய்ஜிங்கின் முயற்சி!

  • February 14, 2026
  • 0 Comments

உலகின் அதிசக்தி வாய்ந்த நாணயத்தை உருவாக்கும் நடவடிக்கையில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பல தசாப்தங்களாக புழக்கத்தில் உள்ள டொலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் என நம்பப்படுகிறது. ஆனால், பெய்ஜிங் செய்யத் தயங்கும் பரந்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாமல்  சீன யுவான் அந்நிய செலாவணி இருப்புக்களில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மந்தமான நுகர்வோர் தேவை மற்றும் ஐந்து ஆண்டு வீட்டுவசதி சரிவு இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம்  பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. […]

உலகம் செய்தி

மியூனிக் பாதுகாப்பு மாநாடு : ஐரோப்பாவுக்கு அமெரிக்காவின் நம்பிக்கை செய்தி

  • February 14, 2026
  • 0 Comments

வொஷிங்டனும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்தவை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் இடம்பெறும் மியூனிக் (Munich) பாதுகாப்பு மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களிடம் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஐரோப்பா வலுவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார். மேலும், ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான அமெரிக்கா உலகளாவிய “புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பை” முன்னெடுக்க விரும்புகிறது என்றும் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறியுள்ளார். இருப்பினும், இடம்பெயர்வு (migration) குறித்து […]

உலகம் செய்தி

60 நாட்கள் தான் அவகாசம் – யேமன் நாட்டவருக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு

  • February 14, 2026
  • 0 Comments

அமெரிக்க அரசு யேமனுக்கு வழங்கிய தற்காலிக பாதுகாப்பு (TPS) நிலையை இரத்து செய்துள்ளது. இதனால், நாட்டில் வசிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட யேமன் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், 60 நாட்களில் அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் செல்லாவிட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய நலனுக்கானது என அமெரிக்கா கூறுகின்ற போதிவும் யேமன் […]

உலகம்

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையா? – மனம் திறந்த ட்ரம்ப்!

  • February 14, 2026
  • 0 Comments

ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்கில் (Fort Bragg) ட்ரம்பிடம், ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “அது நடக்கக்கூடிய சிறந்த விஷயமாகத் தெரிகிறது” என்றுக் கூறினார். “47 ஆண்டுகளாக, அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பேசும்போது நாம் நிறைய உயிர்களை இழந்துவிட்டோம். கால்கள் உடைந்தன, கைகள் உடைந்தன, முகங்கள் உடைந்தன. இது நீண்டகாலமாக […]

செய்தி

புறாக்கள் உயிரோடு எரிப்பு: நெடுந்தீவில் கொடூரம்!

  • February 14, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரைக் கண்டதும் அச்சம் காரணமாக உரிமையாளர்களால் இந்த கொடூரச் செயல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. அங்கிருந்து பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்குப் புறாக்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர். நேற்று முதற்கட்டமாக 44 புறாக்களைக் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்தனர். […]

error: Content is protected !!