இலங்கை செய்தி

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

  • February 14, 2026
  • 0 Comments

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாளந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு 7.50 அளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

  • February 14, 2026
  • 0 Comments

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களைச் சுற்றி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சை நிலைய வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சை காலப்பகுதியில் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்பு அதிகரிப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் 2025 டிசம்பரில் 86 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது   21.1.6%   வளர்ச்சியை குறிக்கிறது. கடந்த மாதத்தில் உலகளாவிய தங்க விலையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்புடன் மத்திய வங்கியின் தங்க இருப்புக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு இருப்பு சொத்துக்கள் […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!

  • February 14, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு என்பவற்றை முற்றாக நிராகரிக்கும் கையெழுத்துப் போரட்டம் ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலையில் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வின்போதே கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதலில் கையொப்பம் இட்டனர். அதன்பின்னர் நிகழ்வில் பங்கேற்ற ஏனையோர் கையெழுத்திட்டனர். […]

இலங்கை செய்தி

மன்னாரில் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

  • February 14, 2026
  • 0 Comments

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 50 கிலோ கிராமுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு போர் கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா!

  • February 14, 2026
  • 0 Comments

வடக்கு அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர்  ஸ்டாமர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும்” HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலால் (HMS Prince of Wales) இது வழிநடத்தப்படும் என்றும் கூறினார். இது யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கான எங்கள் […]

பொழுதுபோக்கு

ஸ்மிருதி மந்தனா–பலாஷ் முச்சல் திருமண விவகாரம் – முச்சல் குறித்து பொதுவெளியில் கருத்து வெளியிட தடை

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார். பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என தகவல்கள் வெளியாகின. இதனிடையே ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் […]

பொழுதுபோக்கு

காதல் மழை பொழிந்த நயன்தாரா!

  • February 14, 2026
  • 0 Comments

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும், பலகோணங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தே கரம் பிடித்தனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல்: பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

  • February 14, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேர்தலை இழுத்தடிப்பு செய்யும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும், சட்டரீதியிலான ஏற்பாடுகள் முடிந்த பின்னர் அது நடக்கும் எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்துவருகின்றன. மக்கள் மத்தியில் தமக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் Sundaralingam Pradeep மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் திருப்பம் – தவளைகளில் இருந்து பெறப்பட்ட கொடிய விஷம்!

  • February 14, 2026
  • 0 Comments

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) டார்ட் தவளைகளில் காணப்பட்ட கொடிய நச்சுப் பொருளைக் உட்கொண்டு சிறையில் உயிரிழந்திருக்கலாம் என இங்கிலாந்து மற்றும் பிற நட்பு நாடுகள் கூறியுள்ளன. நவால்னி எவ்வாறு இறந்தார் என்பதை நிறுவ ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முனிச்சில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் நவல்னியின் மனைவியான யூலியா நவல்னி செய்தியாளர்கள் முன் இதனை தெரிவித்துள்ளார். […]

error: Content is protected !!